பாரிஸ் ஒலிம்பிக் 2024 – அணியின் கேப்டனாக தகுதி பெற்ற தமிழர்!! குவியும் பாராட்டுக்கள்

by Lankan Editor

தமிழர் தேர்வு

இந்தியாயவை சேர்ந்த trap shooter (ட்ராப் ஷூட்டர்) பிருத்விராஜ் தொண்டைமான் வரவிருக்கும் பாரிஸ் ஒலிம்பிக்கில் விளையாட தகுதி பெற்றுள்ளார். மேலும், அவர் இந்திய ஷாட்கன் அணிக்கு தலைமை தாங்குவார் என்று தேசிய துப்பாக்கிச் சுடுதல் கூட்டமைப்பு 5 பேர் கொண்ட அணியை அறிவித்திருக்கிறது.

பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிகள் ஜூலை 26’இல் துவங்கி, ஆகஸ்ட் 11 வரை நடைபெறுகிறது. ஆண்களுக்கான பிரிவில் தமிழகத்தை சேர்ந்த பிருத்விராஜ் தொண்டைமான் தலைமை தங்குகிறார். ஆனந்த்ஜீத் சிங் நருகா இந்தியாவின் ஆண்களுக்கான ஸ்கீட் ஷூட்டராக இருப்பார்.

ஒலிம்பிக்

அதே சமயம் பெண்கள் ஸ்கீட்டில் ரைசா தில்லான் மற்றும் மகேஸ்வரி சவுஹான் ஆகியோர் தகுதிச் சுற்றில் வெற்றி பெற்றுள்ளார்கள். தற்போது தேசிய துப்பாக்கிச் சுடுதல் கூட்டமைப்பு அறிவித்துள்ள 5 பேரும் முதல் முறை ஒலிம்பிக்கில் விளையாடவுள்ளார்கள்.

இந்திய தேசிய துப்பாக்கி சங்கத்தின் (NRAI) பொதுச்செயலாளர் Kr. சுல்தான் சிங் கூறுகையில், “அணியில் இடம்பெறுவதற்காக கடுமையான போட்டி நிலவியது. சமீபத்தில் முடிவடைந்த உலகக் கோப்பையில் சில துப்பாக்கி சுடும் வீரர்கள் பதக்கம் பெற்றிருந்தால் நிலைமை மாறியிருக்கலாம்.

ஆனால், எங்களிடம் ஒரு சிறந்த ஷாட்கன் குழு உள்ளது என நம்புவதாகவும் அவர் குறிப்பிட்டார். தமிழகத்தை சேர்ந்த ஒருவர் ஒலிம்பிக்கில் தகுதி பெற்றுள்ளது மட்டுமின்றி அணியின் தலைவராக செயல்படவுள்ளார் என்ற தகவல் பலரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Related Posts

Leave a Comment