நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழுள்ள காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனம் இந்த மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளது.
உலகெங்கிலும் 15 நாடுகளில் உள்ள 70-இற்கும் மேற்பட்ட ஈரநில பூங்காக்களில் இருந்து சுமார் 100 பிரதிநிதிகள் இதில் பங்கேற்கின்றனர்.
இந்தியாவை பிரதிநித்துவப்படுத்தி 6 பேரும் கொரியாவை பிரதிநித்துவப்படுத்தி 18 பேரும் சீனாவை பிரதிநித்துவப்படுத்தி 11 பேரும் பிலிப்பைன்ஸை பிரதிநித்துவப்படுத்தி 7 பேரும் மியன்மார், இங்கிலாந்து, மொங்கோலியா, ஜெர்மனி ஆகிய நாடுகளை பிரதிநித்துவப்படுத்தி தலா இருவரும் நேபாளம், நியூசிலாந்தை பிரதிநித்துவப்படுத்தி தலா மூவரும் இந்த மாநாட்டில் பங்கேற்கவுள்ளனர்.
மலேசியா, அவுஸ்திரேலியா மற்றும் ஜப்பானை பிரதிநித்துவப்படுத்தி தலா இருவரும் மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் கீழுள்ள காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி ஐவரும் இந்த மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளனர்.
மாநாட்டில் கலந்துகொள்ளும் அனைத்து பிரதிநிதிகளும் எதிர்வரும் 20ஆம் திகதி ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்றைய தினம் ரெம்ஸார் வலய மத்திய நிலையம் மற்றும் தியசரு ஈரநில பூங்காவிற்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.
தியசரு ஈரநில பூங்காவை இலங்கையில் ஈரநில மத்திய நிலையங்களின் கேந்திர நிலையமாக பிரகடனப்படுத்தும் நோக்கில் இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளது.