சென்னை மாநகராட்சி பள்ளிகளில் பிரெஞ்சு பாடம்: உலக தரத்தில் அரசு பள்ளிகள்..!

by Editor News

கடந்த சில ஆண்டுகளாக தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் தரம் உயர்ந்து வருகிறது என்பதும் இதனால் பெற்றோர்கள் அரசு பள்ளிகளில் தங்கள் மாணவ மாணவிகளை சேர்க்க ஆர்வம் காட்டி வருகிறார்கள் என்பதையும் பார்த்து வருகிறோம்.

இந்த நிலையில் சென்னையில் உள்ள அரசு பள்ளிகளை உலக தரத்திற்கு கொண்டு வருவதற்காக சில பள்ளிகளில் பிரெஞ்சு மொழி கற்பிக்க திட்டமிட்டுள்ளதாகி உள்ளன. இது குறித்து சென்னை மாநகராட்சி அதிகாரிகள் கூறியபோது ’சென்னை மாநகராட்சியில் உள்ள பள்ளிகள் சிட்டிஸ் என்ற திட்டத்தின் கீழ் கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த திட்டத்தின் கீழ் அலியன்ஸ் பிரான்சே என்ற அமைப்புடன் இணைந்து சென்னை மாநகராட்சியில் உள்ள மாணவர்களுக்கு பிரெஞ்சு மொழி கற்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மேயர் பிரியாவிடம் அறிக்கை சமர்ப்பித்துள்ளதாகவும், மேயரின் அனுமதி பெற்ற பின் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் கூறியுள்ளனர்.

முதல் கட்டமாக இந்த திட்டத்தின் படி மேல்நிலைப் பள்ளிகளில் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பிரஞ்சு மொழியை கற்பிக்க திட்டமிட்டுள்ளதாகவும் அதன் பிறகு இந்த திட்டம் படிப்படியாக பிற வகுப்புகளுக்கும் விரிவாக்கப்படும் என்றும் அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Related Posts

Leave a Comment