233
கடந்த 2022ம் ஆண்டு ஜீ தமிழில் தொடங்கப்பட்ட இந்த தொடருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. அடுத்தடுத்தும் விறுவிறுப்பான கதைக்களம் அமைய தொடர் நாளுக்கு நாள் அதிக வரவேற்பு பெறுகிறது.
அண்மையில் ஜீ தமிழில் நடந்த விருது விழாவில் கூட கார்த்திகை தீபம் தொடருக்காக கார்த்திக் ராஜ் சிறந்த நாயகன் விருது எல்லாம் பெற்றார்.
தற்போது தொடர் குறித்து என்ன ஸ்பெஷல் தகவல் என்றால் கார்த்திகை தீபம் 500 எபிசோடுகளை எட்டிவிட்டதாம்.
இதனால் சீரியல் ரசிகர்கள் வழக்கம் போல் நிறைய எடிட் செய்யப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்களை பதிவிட்டு சீரியல் குழுவினருக்கு வாழ்த்து கூறி வருகிறார்கள். இந்த தொடர் குழுவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.