வெப்பன்: திரை விமர்சனம்

by Editor News

யூடியூபரான அக்னி (வசந்த் ரவி) சூப்பர் ஹுயூமன் மனிதர்களை கண்டுபிடித்து காட்சிப்படுத்துவதில் ஆர்வலராக உள்ளார்.

முதல் காட்சியிலேயே தேனியில் உள்ள நியூட்ரினோ ஆராய்ச்சி மையப் பகுதியில் வெடிவிபத்து நடக்க, அங்கே ஒரு குழுவிடம் சிக்குகிறார் அக்னி. அவரிடம் விசாரணை நடத்தப்பட சூப்பர் ஹுயூமன் என்ற நபர் ஒருவர் இருப்பதாகவும், அவரை எதனாலும் அழிக்க முடியாது என்றும் தெரிய வருகிறது.

அதனைத் தொடர்ந்து அக்னி ஏன் அங்கு சென்றார்? சூப்பர் ஹுயூமன் என்ற நபருக்கும் ஹீரோவுக்கும் என்ன சம்பந்தம் என்பதே படத்தின் கதை.

ஹிட்லரின் சக்திவாய்ந்த சீரெம் திருடப்பட்டு இந்தியாவில் ஒருவருக்கு செலுத்தப்படுவதுடன் கதை தொடங்குகிறது. அதன் மூலம் அசாத்திய சக்தி வாய்ந்தவராக மாறுகிறார் அந்த நபர். அவரை தேடி ஹீரோ அக்னி ஒருபுறமும், வில்லனின் கேங் மறுபுறமும் தேனியில் உள்ள காட்டுக்கு செல்கின்றனர்.

விறுவிறுப்பாக செல்ல வேண்டிய இந்த திரைக்கதை நான்-லீனியர் முறையில் சொல்ல முயன்று தொய்வாகவே நகர்கிறது. ஹாலிவுட் படம் போன்ற அனுபவத்தை தர முயன்ற இயக்குநர், அதற்காக பிளாக் சொசைட்டி, மாஸ்க் மேன் என பல விடயங்களை உள்ளே கொண்டு வந்து குழப்பியிருக்கிறார்.

பொறுமையை சோதித்தாலும் இடைவேளை வரை படம் ஓரளவு நகர்கிறது. ஆனால் இரண்டாம் பாதியில் எந்தவித சுவாரசியமும் இன்றி காட்சிகள் விரிகின்றன. மேலும் பல இடங்களில் லாஜிக் மீறல்கள். சத்யராஜ், வசந்த் ரவை தவிர எந்த கதாபாத்திரத்திலும் அழுத்தம் இல்லை. கிளைமேக்சில் வரும் ட்விஸ்ட் எந்த ஒரு சர்ப்ரைஸையும் தரவில்லை.

ஜிப்ரானின் இசை படத்தை தாங்குவது ஆறுதல். பிரபு ராகவ்வின் கேமரா ஒர்க், ஸ்டண்ட் காட்சிகள் சிறப்பு. ஹாலிவுட் ஸ்டைலில் மேக்கிங்கை அருமையாக செய்திருக்கிறது படக்குழு.

ஸ்டண்ட் காட்சிகள் பின்னணி இசை மேக்கிங்

சுவாரசியம் இல்லாத திரைக்கதை லாஜிக் மீறல்கள் மொத்தத்தில் சூப்பர் ஹீரோ படம் போல் ஆரம்பித்து, ரசிகர்களை கவர முயற்சிப்பதில் பாதி ஜெயித்திருக்கிறது இந்த வெப்பன்.

ரேட்டிங்: 2.25/5

Related Posts

Leave a Comment