தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் பாக்கியம் மற்றும் இசக்கி சண்முகத்திடம் வந்து சௌந்தரபாண்டியன் நிலைமையை எடுத்து சொல்லி தேர்தலில் நிற்க வேண்டாம் என்று கெஞ்சிய நிலையில் இன்றும் நாளையும் நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது பாக்கியம் இந்த தேர்தலில் மட்டும் உன் மாமா ஜெயிக்கலனா அவருக்கு ஏதாவது ஆகிடுமோனு பயமா இருக்கு என்று கெஞ்சுகிறார். அத்தை கெஞ்சி கேட்டதால் மறுக்க முடியாத சண்முகம் நான் தேர்தல்ல நிக்க மாட்டேன் என்று சத்தியம் செய்து கொடுக்கிறான்.
அதன் பிறகு இந்த விஷயம் அறிந்த பரணி சண்முகம் வீட்டுக்கு வந்ததும் பொருட்களை தூக்கி போட்டு உடைத்து நீ எதுக்கு சத்தியம் பண்ண என்று ஆவேசப்படுகிறார். சண்முகம் அத்தை எனக்கு அம்மா மாதிரி அது கேட்கும் போது என்னால மறுக்க முடியல என்று சொல்கிறான். மறுபக்கம் வீட்டுக்கு வந்த பாக்கியம் சண்முகம் தேர்தல் நிக்க மாட்டான் நீங்க தான் ஜெயிப்பீங்க என்று சொல்ல அதை கேட்டு அவர் பைத்தியம் குணமானது போல நடிக்கிறார்.
இதையடுத்து சண்முகம் வெட்டுக்கிளி உடன் நடந்து சென்று கொண்டிருக்கும் போது பின்னாடி காரில் துரத்தி வரும் சௌந்தரபாண்டி சண்முகத்தை மடக்கி நீ தேர்தல் எண்ணிக்கை மட்டுமே சத்தியம் பண்ணிட்டு உன் பொண்டாட்டிய நிக்க வச்சுட்டியா என்று கோபப்படுகிறார். பரணி தேர்தலில் நிற்கும் விஷயம் அறிந்து சண்முகம் அதிர்ச்சி அடைகிறான். வீட்டுக்கு வந்த சண்முகம் என் அத்தைக்கு நான் தேர்தலில் நிற்க மாட்டேன் என்று சத்தியம் பண்ணி கொடுத்து இருக்கேன், அப்படி இருக்கும்போது நீ எதுக்கு தேர்தல்ல நிற்கிற என்று கோபப்பட நீ உன் அத்தைக்கு சத்தியம் பண்ணி கொடுத்த மாதிரி நான் என் அத்தைக்கு சத்தியம் பண்ணி கொடுத்து இருக்கேன் என்று பதிலடி கொடுக்கிறாள்.
இதைக் கேட்டதும் சண்முகத்தின் தங்கைகள் எல்லோரும் அம்மாவை பார்த்தீர்களா என்று கேள்வி கேட்க பரணி பாக்கல அவங்களுக்காக சில செய்ய வேண்டிய விஷயங்கள் இருக்கு அதுதான் சொன்னேன் என்று சமாளிக்கிறாள். பஞ்சாயத்தார் பரணி தேர்தலில் நிற்பதை அறிவிக்க பாண்டியம்மா இதை இப்படியே விடக்கூடாது என்று சௌந்திரபாண்டிக்கு ஒரு ஐடியா சொல்ல அவர் ஏ கே அண்ணாச்சியை சந்தித்து பரணியை கடத்த சொல்கிறார். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.