எதிர்நீச்சல் சீரியல் இன்றுடன் முடிவடையும் நிலையில், இதில் நடித்த பிரபலங்கள் அனைவரும் வேதனையில் இருக்கின்றனர்.
குறித்த சீரியல் எந்தவொரு முன் அறிவிப்பும் இல்லாமல் திடீரென நிறுத்தப்பட்டுள்ளது. அதாவது கதையின் போக்கை சேனல் தரப்பு மாற்றக் கோரியுள்ளனர்.
ஆனால் குறித்த சீரியல் இயக்குனர் இதற்கு சம்மதிக்காததால் குறித்த சீரியல் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த தகவல் மறுநாள் படப்பிடிப்புக்கு வந்த பின்னே இதில் நடிக்கும் பிரபலங்களுக்கு தெரியவந்ததாம்.
இந்நிலையில் இதில் நந்தினி கதாபாத்தில் நடித்த ஹரிப்பிரியா சோகமாக காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
குறித்த சீரியலில் நடித்த பிரபலங்கள் பலரும் எமோஷ்னலாக பதிவினை வெளியிட்டு வரும் நிலையில், இதில் நந்தினி கதாபாத்தில் நடித்த ஹரிப்பிரியா பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
இதில் ஹரிப்பிரியா கடைசிநாள் படப்பிடின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள், கடைசி டப்பிங் பேசிய போது எடுத்த காட்சியையும் பதிவிட்டுள்ளார்.
டப்பிங் பேசும் போது மிகவும் எமோஷ்னலாக அழுதுகொண்டு பேசியிருப்பது நன்றாகவே தெரிகின்றது.
குறித்த காணொளியினை அவதானித்த ரசிகர்கள், நந்தினிக்கு ஆறுதல் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.