தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் பஞ்சாயத்தை கூட்டிய சௌந்தரபாண்டி தர்மகத்தா பதவியை தக்க வைத்துக் கொள்ள சண்முகத்தால் எல்லாத்தையும் பார்க்க முடியாது என்று சொல்லி என் நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.
அதாவது சண்முகம் உங்களுக்கு வயசாகிடுச்சு மாமா நீங்க ஓய்வெடுங்க எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன் என்று சொல்ல சௌந்தரபாண்டி செய்ததறியாது நிற்கிறார். அதன் பிறகு வீட்டுக்கு வந்த அவர் நைட் நேரத்தில் தனியாக உட்கார்ந்து தனியாக பேசிக் கொண்டிருக்க தூக்கத்திலிருந்து எழுந்த பாக்கியம் இதை பார்க்கிறாள்.
என்னங்க தனியா பேசிட்டு இருக்கீங்க என்று கேட்க தனியாக பேசிட்டு இருக்கேனா? முன்னாடி தான் ஆளுங்க உக்காந்துட்டு இருக்காங்களே என பைத்தியம் போல நடந்து கொள்ள, பாக்கியம் அதிர்ச்சி அடைகிறாள். மறுநாள் காலையில் ஒரு குச்சி ஒன்றை எடுத்துக்கொண்டு நான் தர்மகத்தா தேர்தல்ல ஜெயிச்சுட்டேன் என்று சொல்லி முருகனுக்கு காவடி எடுப்பதாக அரோகரா போட்டு ஆடிக்கொண்டிருக்கிறார்.
தர்மகத்தா பதவி கைவிட்டு போறதால தான் இவர் இப்படி ஆகிட்டாரு என்று பாக்கியம் வருத்தப்படுகிறாள். இதனால் சண்முகத்தை சந்தித்து தர்மகத்தா பதவியை தன்னுடைய புருஷனுக்காக விட்டுக்கொடு என்று கெஞ்சி கேட்கிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் மிஸ் பண்ணாம பாருங்க.