வெளியாகப்போகும் காஞ்சனா 4 புதிய அப்டேட் என்ன?

by Editor News

காஞ்சனா 4 திரைப்படத்தை இயக்கும் பணியில் மும்மரமாக இறங்கியுள்ளார் ராகவா லாரன்ஸ். அதற்கான முதற்கட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

தமிழ் சினிமாவில் தனது நடனம் மட்டும் இல்லாமல் தனது நடிப்பு திறமையாலும் மக்கள் மத்தியில் இடம்பிடித்தவர் தான் நடிகர் லாரன்ஸ்.

இவர் நடித்து இயக்கிய காஞ்சனா, காஞ்சனா 2, காஞ்சனா 3, திரைப்படங்கள் தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றி அடைந்தன. இந்த திரைப்படங்கள் உலக அளவில் பெரும் வசூலை ஈட்டின என்று கூறப்பட்டது. அதிலும் குறிப்பாக காஞ்சனா 2 திரைப்படம் உலக அளவில் 100 கோடி ரூபாய் வசூல் செய்ததாகவும் தகவல் வெளியானது.

இந்த படம் பேய் கதையை மையமாக கொண்டு எடுக்கப்பட்டாலும் மாற்றுத்திறனாளிகளின் வாழ்க்கைக்கு ஒரு திருப்பு முனையாக அமைந்தது. அந்த வகையில் காஞ்சனா 4 படம் தயாரிப்பதில் புதிய அப்டேட்டுகள் இணையத்தில் வெளியாகி உள்ளது.

இந்த திரைப்படமும் முதல் மூன்று படங்களை போல திகில் மற்றும் காமெடி பாணியில் எடுக்கப்படவுள்ளது. இதற்கானப் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் தொடங்கும் என தகவலைகள் வெளியாகியுள்ளது.

இந்த திரைப்படத்திலும் ராகவா லாரன்ஸ் நடித்து, இயக்கி தானே தயாரிக்கவும் உள்ளார். காஞ்சனா 4 படத்தின் ஸ்க்ரிப்ட் வேலைகள் நடந்து வருவதாக ஏற்கனவே நேர்காணல் ஒன்றில் பங்கேற்ற போது ராகவா லாரன்ஸ் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment