350 இடங்களுக்கு மேல் இந்த முறை நிச்சயம் கைப்பற்றுவோம் என பாஜக கூறி வந்த நிலையில் தற்போது வரை வெறும் 235 இடங்களில் மட்டுமே முன்னிலையில் உள்ளனர்.
நாடாளுமன்ற மக்களவை தேர்தல் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கி ஜூன் ஒன்றாம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்றது. நாடாளுமன்ற தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் . கடந்த முறை தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்திருந்த நிலையில் இந்த முறை கூட்டணி அல்லாமல் ஆட்சி அமைக்க முடியாத நிலைக்கு பாஜக தள்ளப்பட்டுள்ளது. இதுவரை வெளியான முடிவுகளின்படி பாஜக மற்றும் 235 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. இந்தியா கூட்டணி 230 இடங்களில் முன்னிலையில் உள்ள நிலையில் காங்கிரஸ் மற்றும் 99 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. இதன் மூலம் 300 முதல் 400 இடங்களை பாஜக கூட்டணி கைப்பற்றும் என்று வெளியான கருத்துக்கணிப்புகள் பொய்யாகியுள்ளன.