244
இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அணிகளுக்கு இடையிலான ஆரம்ப சுற்றின் முதல் போட்டியில் தென்னாபிரிக்கா அணிக்கு 78 என்ற வெற்றி இலக்கை இலங்கை அணி நிர்ணயித்துள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து 77 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.