டெல்லியை வாட்டும் வெப்பம்: தண்ணீர் இன்றி தவிக்கும் மக்கள்!

by Editor News

இந்திய தலைநகர் டெல்லியில் அதிகரித்துள்ள வெப்பம் காரணமாக, பல்வேறு இடங்களில் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய தலைநகர் டில்லியில் சில நாட்களாக வெப்ப நிலை கடுமையாக உயர்வடைந்துள்ளது.
50 டிகிரி செல்சியசிற்கும் கூடுதலாக வெப்பநிலை அங்கு உயர்ந்துள்ள சூழலில், வெப்ப அலையில் தாக்கத்தில் பல்வேறு நோய்களும் பரவி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிக வெப்பத்தினால் யமுனை ஆற்றில் நீர்மட்டமும் குறைவடைந்துள்ளமையால், நீர் பற்றாக்குறையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.

இதனால், நீரை வீணாக்கினால் அபராதம் விதிக்கப்படும் என டில்லி அரசாங்கம் அறிவித்தது.
வடக்கு மற்றும் தென்மேற்கு டெல்லியில் கடுமையான தண்ணீர் பற்றாக்குறையால், தண்ணீர் லாரிகளில் கொண்டு சென்று நீர் வழங்கப்படுகிறது.

மேலும், நகரத்தின் பல்வேறு பகுதிகளில் மக்கள் நீருக்காக நீண்ட தூரம் செல்லும் அவல நிலமைக்கும் தள்ளப்பட்டுள்ளனர்.

ஒரு சில இடங்களில் தண்ணீர் கருமையாகவும், துர்நாற்றம் வீசும் வகையிலும் உள்ளமையால் குடிக்கவோ அல்லது சேமிக்கவோ, பிற தேவைகளுக்கு பயன்படுத்தவோ முடியவில்லை என மக்கள் கூறுகின்றனர்.

டெல்லியில் நாள் ஒன்றுக்கு 1,290 மில்லியன் கேலன்கள் தண்ணீர் தேவையாக உள்ளது.
ஆனால், 969 மில்லியன் கேலன்கள் அளவுக்கே தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது.

இதனால், 321 மில்லியன் கேலன்கள் குறைவான நீர் விநியோகம் நடைபெறுகிறது.
கடுமையான தண்ணீர் பற்றாக்குறையால், இந்த நிலைமை ஏற்பட்டு உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்தியாவின் தலைநகர் டெல்லியில் வரலாறு காணாத வெப்பநிலை பதிவாகியுள்ளதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் வெப்பம் உச்சம் கொடுக்கும் நிலையில், இன்று டெல்லியில் 49.9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளதாக அந் நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில் 50 டிகிரி செல்சியஸ் வரை வெயில் பதிவாகக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தண்ணீர் தட்டுப்பாடு குறித்து மாநில அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளதுடன்,…

2024-05-29
In “இந்தியா”

உயர் வெப்பநிலையால் இந்தியாவில் அதிகளவான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக அறிவிப்பு!
உயர் வெப்பநிலையால் இந்தியாவில் அதிகளவான உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக லான்செட் அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. சுகாதாரமான எதிர்காலத்துக்கான சிவப்புக் குறியீடு என்ற தலைப்பில் 2021 ஆம் ஆண்டுக்கான ஆய்வறிக்கையை லான்செட் ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையிலேயே மேற்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ”உயர் வெப்பத்தால் ஏற்கனவே பல்வேறு உடல் பாதிப்புகள் ஏற்பட்டு வருவதோடு, உணவு மற்றும் தண்ணீர் பாதுகாப்பு இல்லாத நிலையை சமூகம் சந்திக்கும் நிலை உருவாகியுள்ளது.…

2021-10-21
In “இந்தியா”

இங்கிலாந்தில் தேசிய வெப்ப சுகாதார அவசரநிலை: பொதுமக்கள் வெளியில் நடமாட வேண்டாமென எச்சரிக்கை!

இங்கிலாந்தின் சில பகுதிகளுக்கு சிவப்பு வெப்ப எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், பொதுமக்கள் வெளியில் நடமாட வேண்டாமென அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெப்பநிலை உச்சத்தை எட்டும் என கணிக்கப்பட்டுள்ளதால், இது ‘தேசிய அவசரநிலை’ எச்சரிக்கை அளவைத் தூண்டுகிறது. திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிக வெப்பம் இருக்குமென பிரித்தானிய வானிலை முன்னறிவிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். புயல்களுக்கு முன்னர் இதுபோன்ற எச்சரிக்கைகள் வழங்கப்பட்டிருந்தாலும், வெப்பம் காரணமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை. 40 செல்சியசுக்கும் அதிகமான வெப்பநிலை காணப்படுவதற்கு…

2022-07-16
In “இங்கிலாந்து”

Related Posts

Leave a Comment