இந்த 3 உணவுகளை சிக்கனுடன் சேர்த்து சாப்பிடாதீங்க.. விஷத்தற்கு சமம்!

by Editor News

நீங்கள் சிக்கன் சாப்பிட விரும்பினால், சில விஷயங்களை அவசியம் தெரிந்துகொள்ள வேண்டும். அதாவது, சிக்கனுடன் சாப்பிடக் கூடாத உணவுகள் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும். மீறி சாப்பிட்டால், ஆரோக்கியத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும்.

குறிப்பாக, உடலில் ஒவ்வாமை மற்றும் எதிர்வினைகளை ஏற்படுத்தும். மேலும், கடுமையான நோய்களுக்கு கூட வழிவகுக்கும். எனவே, சிக்கனுடன் எந்த உணவை சாப்பிடுவது தீங்கு விளைவிக்கும் என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.

பால்:

சிக்கனுடன் பால் சாப்பிடுவது விஷத்திற்கு சமம். இவை இரண்டும் ஒன்று சேர்ந்து உடலில் மோசமான விளைவை ஏற்படுத்தும். அதாவது, சொறி, வெண்புள்ளிகள், அரிப்பு போன்றவை ஏற்படும்.

மீன்:

சிக்கன் சாப்பிடும் போது மீன் சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. காரணம், இவை இரண்டிலும் புரதம் நிறைந்துள்ளது. ஆனால், வெவ்வேறு வகையான புரதங்கள். எனவே, இவை இரண்டும் ஒன்று சேர்ந்தால், உடலுக்கு தீங்கு.

தயிர்:

சிலர் சிக்கனுடன் தயிரையும் சேர்த்து சாப்பிடுவது பிடிக்கும். ஆனால், தயிரின் தன்மை குளிர்ச்சியாகவும், கோழியின் தன்மை சூடாகவும் இருப்பதால், இவை செரிமானத்தில் மோசமான விளைவை ஏற்படுத்தும்.

Related Posts

Leave a Comment