நயன்தாராவிற்கு ஜோடியாகும் கவின்…

by Editor News

நடிகை கவின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். பிக்பாஸிலிருந்து வெளியே வந்ததும் அடுத்தடுத்து படங்களில் நடிப்பதற்கு வாய்ப்புகளை பெற்றார்.

தற்போது இவர் நடித்து வெளிவரும் படங்கள் அனைத்தும் பயங்கர ஹிட்டாகி வரும் நிலையில், பட வாய்ப்பும் அடுத்தடுத்து குவிந்து வருகின்றது.

தற்போது கைவசம் நான்கு படங்களை வைத்திருக்கும் நயன்தாராவிற்கு ஜோடியாக நடிக்க உள்ளார். தன்னைவிட வயதில் மூத்த நடிகையை காதலிக்கும் இளைஞனாக கவின் இப்படத்தில் நடிக்கிறாராம்.

இப்படத்திற்கு அனிரூத் இசையமைக்க உள்ளதாகவும், விரைவில் இதன் அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகின்றது.

இப்படத்திற்கு நடிகர் கவின் 8 கோடி சம்பளம் வாங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது கடைசியாக நடித்து வெளிவந்த ஸ்டார் படத்திற்கு ரூ.2 கோடி சம்பளம் வாங்கிய நிலையில், தற்போது இப்படத்திற்காக தன் சம்பளத்தை 8 கோடியாக உயர்த்தியுள்ளாராம்.

Related Posts

Leave a Comment