சென்னை மாநகர பேருந்துகளில் மின்னணு டிக்கெட் இயந்திரங்கள்!!

by Editor News

அரசு போக்குவரத்து கழகத்தை மேம்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வரும் டிஜிட்டல் பண பரிவர்த்தனை முறை மூலம் டிக்கெட் பெறும் வசதி தற்போது அறிமுகம் செய்யப்பட்டது. இந்த திட்டத்தின் மூலம் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு மற்றும் கூகுள் பே, போன் பே போன்ற செயல்கள் மூலம் டிக்கெட்களை பயணிகள் எடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் கடந்த பிப்ரவரியில் சோதனை முறையில் அறிமுகமான ETM-கள், சென்னையில் உள்ள அனைத்து 32 டெப்போக்களிலும் அறிமுகப்படுத்தியது மாநகரப் போக்குவரத்துக் கழகம். ETM-கள் மூலம் டிக்கெட் பெற UPI, பணம், மற்றும் கார்டுகளை பயன்படுத்தலாம்.

Related Posts

Leave a Comment