சென்னையில் தொடர்ந்து 5 நாட்களாக 105 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவாகும் நிலையில் ஜூன் 2ஆவது வாரம் வரை வெப்பம் கடுமையாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று முதல் 04.06.2024 வரை:
அதிகபட்ச வெப்பநிலை, (1-3° செல்சியஸ்) குறைந்து, இயல்பை ஒட்டியும்/இயல்பை விட சற்று அதிகமாகவும் இருக்கக்கூடும். சென்னையை பொறுத்தவரை அதிகபட்ச வெப்பநிலை 41° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 40-41° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 30-31° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியிருந்தது.
இந்நிலையில் சென்னையில் தொடர்ந்து 5 நாட்களாக 105 டிகிரிக்கு மேல் வெப்பம் பதிவாகும் நிலையில் ஜூன் 2ஆவது வாரம் வரை வெப்பம் கடுமையாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னையில் பதிவாகும் வெப்பத்தை விட உணரும் வெப்பம் அதிகமாக உள்ளது. சென்னையில் பதிவாகும் 105°F வெப்பம் டெல்லியில் பதிவாகும் 110°F-க்கு இணையாக உள்ளது; தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் வெப்பம் குறைந்தாலும் சென்னையில் குறையாது.