விஜய் டிவியில் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகும் முக்கிய சீரியலின் ஸ்பெஷல் எபிசோட்..

by Editor News

சன் டிவிக்கு போட்டியாக பல ஹிட் சீரியல்களை ஒளிபரப்பி முன்னணி தொலைக்காட்சியாக வலம் வருகிறது விஜய் டிவி.

டிஆர்பி ரேட்டிங்கில் கடந்த சில மாதங்களாக 5ல் இடம்பெறாத விஜய் தொடர்கள் இப்போது அதிக ரேட்டிங்கை பெற்று வருகிறது.

அதிலும் சிறகடிக்க ஆசை என்ற தொடர் நாளுக்கு நாள் ரசிகர்கள் வட்டாரத்தை அதிகரித்துக்கொண்டு இருக்கிறது.

இந்த தொடர் தான் டாப் 5 டிஆர்பியில் 3ம் இடத்தை பிடித்துள்ளது.

சீரியல்களுக்கு பெயர் போன சன் டிவியில் ஏற்கெனவே ஞாயிற்றுக்கிழமைகளில் சில தொடர்களின் ஸ்பெஷல் எபிசோடுகள் ஒளிபரப்பாகி வருகிறது.

அதேபோல் இப்போது விஜய் டிவியில் ஞாயிற்றுக்கிழமைகளில் ஒரு முக்கிய தொடர் ஒளிபரப்பாக இருப்பதாக தகவல் வந்துள்ளது.

அதாவது விஜய் டிவியின் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2ம் பாகம் வரும் ஞாயிற்றுக்கிழமை மதியம் 3 முதல் 5 மணி வரை என 2 மணிநேரம் ஸ்பெஷல் எபிசோட் ஒளிபரப்பாக இருக்கிறதாம்.

Related Posts

Leave a Comment