பல்வேறு விழாக்கள் மற்றும் விருந்து உபசரிப்புகளில் கலந்து கொள்ளும் நாம் அறுசுவை விருந்தாக இருந்தாலும் சரி, பிரியாணியாக இருந்தாலும் சரி, சாப்பிட்டவுடன் பீடா போடுவது என்பது உணவு பழக்க வழக்கத்தில் ஒரு ஸ்டைலாகவே மாறி உள்ளது. பீடா போட்டால் மயக்கம் வரும், போதை வரும் என்றெல்லாம் இருந்த காலகட்டங்கள் மாறி, விருந்துகளில் கலந்து கொள்ளும் பெரியவர்கள் மட்டுமே பீடாவை பயன்படுத்தி வந்த நிலையில், தற்போது சிறிய வயது குழந்தைகள் கூட விருந்து சாப்பிட்டவுடன் பீடாவை ருசித்து வருகின்றனர்.
சாப்பிட்ட பிறகு செரிமானம் ஆவதற்காக இன்னும் எத்தனை நாளைக்கு தான் பீடாவே போட்டுக் கொள்வது. காலம் மாறுகிறது அல்லவா, தொழில்நுட்பங்களுக்கு ஏற்றவாறு பீடாவையும் வித்தியாசமாக உருவாக்க வேண்டும் என்ற அடிப்படையில் புதுச்சேரி காந்தி வீதியில் மாஸ்ட் பனாரசி பான் என்ற ஒரு கடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த கடையில் சுமார் 50 வகையான ருசியில் பீடா ஐஸ்கிரீம் வழங்கப்படுகிறது. குறிப்பாக ஸ்ட்ராபெரி, வெண்ணிலா, சாக்லேட், பைனாப்பிள், மேங்கோ உள்ளிட்ட பல்வேறு சுவைகளில் பீடா ஐஸ்கிரீம் புதுச்சேரியில் கிடைக்கிறது.
இந்த பீடா ஐஸ்கிரீமை விரும்பி சாப்பிடுவதற்கு என்று புதுச்சேரியில் ஒரு தனி கூட்டமே உள்ளது. வார இறுதி நாட்களில் புதுச்சேரி வரும் சுற்றுலா பயணிகள் பீடா ஐஸ்கிரீம் கடையை நோக்கி படையெடுத்து வருகிறார்கள். இந்த பீடா ஐஸ்கிரீம்20 ரூபாயிலிருந்து கிடைக்கிறது. அது மட்டுமல்லாமல் கொல்கத்தா வெத்தலை, பாம்பே மசாலா உள்ளிட்ட 100% இயற்கையாக உருவாக்கப்பட்ட சுத்தமான பொருட்களைக் கொண்டுபீடா ஐஸ்கிரீம் உருவாக்கப்படுகிறது.
இந்த பீடா ஐஸ்கிரீமை குழந்தைகள் முதல் பெரியவர்கள் யார் வேணாலும் உண்டு மகிழலாம் என்றும், இந்த கடையில் போதை 100% தடை செய்யப்பட்டுள்ளது என்று இந்த கடையின் உரிமையாளர் ராஜி தெரிவித்துள்ளார். எனவே செரிமானத்திற்கு உதவும் பீடா ஐஸ்கிரீமை வாங்கி உண்டு மகிழ வேண்டும் என கடையின் உரிமையாளர் தெரிவித்தார்.