மத்திய அரசு பொதுமக்களுக்கு மானிய விலையில் கேஸ் சிலிண்டர்களை வழங்கி வருகிறது. உஜ்வாலா திட்டத்தின் கீழ், ஒவ்வொரு கேஸ் சிலிண்டருக்கும் ரூ.300 மானியம் வழங்கப்படுகிறது. நாடு முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் இந்த மானியத்தை பெறுகின்றனர். இந்நிலையில் ஜூன் 1 ஆம் தேதி முதல் சில லட்சம் பேருக்கு மானியம் நிறுத்தப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
சிலிண்டருக்கு ரூ.300 மானியம் பெற பொதுமக்கள் E-KYCயை முடிக்க வேண்டும். அவ்வாறு E-KYC முடிக்காதவர்களுக்கு வரும் ஜூன் 1 ஆம் தேதி முதல் மானியத்தை நிறுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. எனவே E-KYC முடிக்காதவர்கள் அதை உடனடியாக செய்து முடிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
முன்னதாக மார்ச் 31 ஆம் தேதிக்குள் E-KYCயை முடிக்க மத்திய அரசு காலக்கெடு வழங்கியது. அதன்பிறகு மே 31 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டது. நாடாளுமன்ற தேர்தல் காரணமாக அவகாசம் நீட்டிக்கப்பட்ட நிலையில் இனிமேலும் அவகாசம் வழங்கப்படமாட்டாது.
நாடாளுமன்ற தேர்தல் முடிந்து புதிய அரசு ஆட்சி அமைக்கவுள்ள நிலையில், ஜூன் 1 ஆம் தேதி முதல் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. அதில் முதன்மையானது இந்த இ-கேஒய்சி. எனவே இ-கேஒய்சி முடிக்காதவர்கள் உடனடியாக அதை செய்வதன் மூலம் தொடர்ந்து மானியம் பெற முடியும்.
இ-கேஒய்சியை உஜ்வாலா திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான மூலம் எளிதாக செய்து முடித்துவிடலாம். உங்கள் பெயர், மொபைல் எண், முகவரி, ஆதார் போன்ற அனைத்து முக்கிய விவரங்களும் உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஏதேனும் விவரங்கள் தவறாக கொடுக்கப்பட்டிருந்தால், அதை திருத்த வேண்டியது கட்டாயம்.