ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு: நயினார் நாகேந்திரன் ஆஜராகாததால் பரபரப்பு..!

by Editor News

தாம்பரம் ரயில் நிலையத்தில் ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் நயினார் நாகேந்திரன் உட்பட 4 பேர் இன்று சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராகவில்லை என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ஜூன் 4ம் தேதிக்குப் பிறகு ஆஜராவதாக அதிகாரிகளிடம் நால்வரும் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

ரூ.4 கோடி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கில் நயினார் நாகேந்திரன், பாஜக அமைப்புச் செயலாளர் கேசவ விநாயகம், தொழில் பிரிவு தலைவர் கோவர்தன், நயினார் நாகேந்திரனின் உதவியாளர் மணிகண்டன் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டது.

இந்த வழக்கில் நால்வரும் இன்று ஆஜராவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நால்வருமே ஆஜராகவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் நால்வரும் ஜூன் நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற இருப்பதால் அதற்கான பணியில் இருப்பதாகவும் கூறியுள்ளதாகவும் தெரிகிறது.

எனவே வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் நான்காம் தேதிக்கு பிறகு ஆஜர் ஆவதாக நால்வர் தரப்பிலிருந்து காவல் துறைக்கு தகவல் அனுப்பி இருப்பதாகவும் புறப்படுகிறது. இதனை அடுத்து இந்த வழக்கில் காவல்துறையினரின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Related Posts

Leave a Comment