டிஆர்பி பட்டியலில் விஜய் டிவியில் புதிதாக தொடங்கப்பட்ட ஆஹா கல்யாணம் மற்றும் சன் டிவியில் புதிதாக தொடங்கப்பட்ட மல்லி ஆகிய சீரியல்கள் கடைசி இரண்டு இடங்களை பிடித்துள்ளன. குறிப்பாக 10வது இடத்தில் உள்ள ஆஹா கல்யாணம் சீரியலுக்கு 5.61 டிஆர்பி புள்ளிகளும், 9ம் இடத்தில் உள்ள மல்லி சீரியலுக்கு 5.85 டிஆர்பி புள்ளிகளும் கிடைத்துள்ளன. இதற்கு அடுத்தபடியாக பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு 8ம் இடம் கிடைத்துள்ளது. அதற்கு 6.54 டிஆர்பி புள்ளிகள் கிடைத்திருக்கிறது.
கடந்த வாரம் டாப் 5-ல் இடம்பிடித்த பாக்கியலட்சுமி சீரியல் இந்த வாரம் 6.82 டிஆர்பி புள்ளிகளுடன் 7-ம் இடத்துக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. சன் டிவியில் கேப்ரியல்லா நடிப்பில் ஒளிபரப்பாகி வரும் சுந்தரி 2 சீரியல் கடந்த வாரத்தை காட்டிலும் ஒரு இடம் முன்னேறி 6.93 டிஆர்பி புள்ளிகளுடன் 6ம் இடத்தில் உள்ளது. அதேபோல் கடந்த வாரம் 6-வது இடத்தில் இருந்த எதிர்நீச்சல் சீரியல், இந்த வாரம் 7.11 புள்ளிகளுடன் டாப் 5-ல் நுழைந்து மாஸ் காட்டி இருக்கிறது.
இதற்கு அடுத்தபடியாக நான்காம் இடத்தில் வானத்தைப் போல சீரியல் உள்ளது. அதற்கு 7.37 டிஆர்பி புள்ளிகள் கிடைத்துள்ளன. கடந்த வாரத்தை போல் இந்த வாரமும் சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுத்துள்ள சிறகடிக்க ஆசை சீரியலுக்கு 7.80 டிஆர்பி புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தை தக்க வைத்துள்ளது. முதல் இரண்டு இடங்களை வழக்கம்போல் சன் டிவியின் சிங்கப்பெண்ணே மற்றும் கயல் சீரியல்கள் ஆக்கிரமித்துள்ளன. இதில் கயல் சீரியலுக்கு 8.66 டிஆர்பி புள்ளிகளும், சிங்கப்பெண்ணே சீரியலுக்கு 8.76 டிஆர்பி புள்ளிகளும் கிடைத்துள்ளது.