நவீன வாழ்க்கை முறையில், நாம் குப்பை உணவுகளை தான் அதிகம் சாப்பிடுகிறோம். அதிலும் குறிப்பாக, பேக்கேஜ்கள் மற்றும் ஜங்க் ஃபுட்களில் அஜின்மோட்டோ தான் பயன்படுத்தப்படுகிறது. இந்த அஜினோமோட்டோ ஒரு வகையான உப்பு ஆகும். மேலும், இது உணவின் சுவையை அதிகரிக்கச் செய்கிறது.
அஜினோமோட்டோ என்றால் என்ன?:
அஜினோமோட்டோ என்பது ஒரு வகை ரசாயனம் ஆகும். இது MSG என்றும் அழைக்கப்படுகிறது. MSG என்பது மோனோ சோடியம் குளுமேட் ஆகும். இது புரதத்தின் ஒரு பகுதியாகும். மேலும், இது அமினோ அமிலம் என்றும் அழைக்கப்படுகிறது. அஜினோமோட்டோ 1909 ஆம் ஆண்டு ஜப்பானிய விஞ்ஞானி கிகுனாவோ அகேடாவால் கண்டுபிடிக்கப்பட்டது.
அஜினோமோட்டோ எந்த வகையான உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது?:
நூடுல்ஸ், ஃப்ரைடு ரைஸ் மற்றும் மஞ்சூரியன், சூப் உணவுகள் போன்ற பெரும்பாலான சீன உணவுகளில் தான் அஜினோமோட்டோ பயன்படுத்தப்படுகிறது. அதுபோல, இது, பீட்சா, பர்கர், மேகி மசாலா பொருட்களிலும், ஜங்க் ஃபுட் களிலும், தக்காளி சாஸ், சோயா சாஸ் போன்றவற்றிலும், சிப்ஸ் போன்ற உணவுகளிலும் பயன்படுத்தப்படுகிறது. இப்போது, அஜின்மோட்டோ சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் என்ன..? அதைப் பற்றி தெரிந்து கொள்ளலாம்.
நரம்பு மண்டலத்தை பாதிக்கும்: சீன உணவில் பயன்படுத்தப்படும் அஜினோமோட்டோ, நரம்பு மண்டலத்தை பெரிதும் பாதிக்கிறது. இதில் உள்ள குளுடாமிக் அமிலம் மூளையில் உள்ள நரம்பியக்கடத்தியாக செயல்படுகிறது. இது உடலில் அதிகமாக இருந்தால், அது மூளைக்கு அபாயத்தை ஏற்படுத்தும்.
எடையை அதிகரிக்கும்: இன்று பெரும்பாலானோர் ஜங்க் ஃபுட்களை விரும்பி சாப்பிடுகின்றனர். இரண்டாவது விஷயம் இன்று உணவு பழக்கம் சீரழிந்துவிட்டது. நொறுக்கு தீனிகளின் சுவையை அதிகரிக்க அஜினோமோட்டோ பயன்படுத்தப்படுகிறது. அத்தகைய சூழ்நிலையில், அஜினோமோட்டோ உங்கள் பசியை அதிகரிக்கச் செய்யும். இதனால் நீங்கள் மீண்டும் மீண்டும் சாப்பிடுவதினால் உடல் பருமனாகும்.
கர்ப்பிணிப் பெண்களுக்கு ஆபத்து: கர்ப்பிணிப் பெண்கள் சீன உணவுகளை ஒருபோதும் சாப்பிட வேண்டாம். இதற்கு முக்கிய காரணம் அஜினோமோட்டோ. ஏனெனில், இதில் அதிக சோடியம் உள்ளது. கர்ப்ப காலத்தில் சோடியம் அதிகமாக சாப்பிடுவது வீக்கம் மற்றும் அசௌகரியத்தை ஏற்படுத்துகிறது. இது குழந்தையையும் பாதிக்கும்.
உயர் இரத்த அழுத்த பிரச்சனை: சீன உணவில் உள்ள அஜினோமோட்டோ இரத்த அழுத்த பிரச்சனையை உண்டாக்கும். ஒருவேளை, நீங்கள் ஏற்கனவே இரத்த அழுத்த நோயாளியாக இருந்தால், அஜினோமோட்டோ உணவை சாப்பிட வேண்டாம். இதன் காரணமாக, இரத்த அழுத்த பிரச்சனை மேலும் அதிகரிக்கும்.
தூக்கமின்மை மற்றும் ஒற்றைத் தலைவலி: உங்களுக்கு தூக்கம் மற்றும் ஒற்றைத் தலைவலி தொடர்பான பிரச்சனைகள் இருந்தால், அதற்கு அஜினோமோட்டோவும் ஒரு முக்கிய காரணம் என்றே சொல்லலாம். இது தூக்கமின்மை மற்றும் உற்ற தலைவலியை ஏற்படுத்தும். மேலும், அஜினோமோட்டோ உணவை சாப்பிடுவதால் நாள் முழுவதும் சோர்வாக இருப்பீர்கள்.