உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினசரி ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். வழக்கம் போல் கோடை விடுமுறை நாட்களான தற்போது தினசரி கூட்டம் அதிகரித்து வருகிறது. இதனால் ஜூன் 30 வரை வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் விஐபி பிரேக் தரிசனத்தை தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது.
நாளுக்கு நாள் கூட்டம் அலைமோதுவதால் பக்தர்கள் நாள் கணக்கில் நின்று சாமியை தரிசனம் செய்கின்றனர். ரூ.300 சிறப்பு தரிசன பக்தர்களும் 2-3 மணி நேரம் வரை காத்திருந்து ஏழுமலையானை தரிசனம் செய்து செல்கின்றனர். இப்படி பக்தர்கள் தரிசனத்திற்காக கஷ்டப்படுவதால் தேவஸ்தானம் ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது.
பக்தர்களின் வசதிக்காக ஆக்டோபஸ் பவனில் இருந்து சீலா தோரணம் வரை 8 சிறப்பு பேருந்துகள் ஏற்பாடு செய்யப்பட்டு ஒவ்வொரு நிமிடமும் பக்தர்களை ஏற்றிச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. வரிசைகளில் நெரிசல் ஏற்படாமல் இருக்க TTD விஜிலென்ஸ் மற்றும் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், பிரசாதம் இரு மடங்காக வழங்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, குழந்தைகளுக்கு அவ்வப்போது பால் வழங்கப்படுகிறது. மேலும், 27 இடங்களில் குடிநீரும், 4 இடங்களில் அன்னதானமும் வழங்கப்படுகிறது.
கடந்த 10 நாட்களில் சுமார் 2.60 லட்சம் பக்தர்கள் திருமலைக்கு வந்துள்ளதாக ஆய்வுகள் தெரிவித்துள்ளது. நாளுக்கு நாள் கூட்டம் அலைமோதுவதால் தேவஸ்தானம் பல மாற்றங்களை கொண்டு வருகிறது.