ஜம்மு காஷ்மீரில் மக்களவை தேர்தல் வாக்குப்பதிவு: முன்னாள் முதல்வர் சாலையில் அமர்ந்து போராட்டம்..!

by Editor News

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணி முதல் நடைபெற்று வரும் நிலையில் திடீரென முன்னாள் முதல்வர் மெகபூபா சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில் ஏற்கனவே ஐந்து கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில் இன்று 6வது கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது.

இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் ஜம்மு காஷ்மீர் மாநிலத்திலும் இன்று தான் மக்களவைத் தேர்தல் நடைபெறுவதால் மக்கள் நீண்ட அரசியல் என்று வாக்களித்து வருகின்றனர்.

இந்த நிலையில் முன்னாள் முதல்வர் மற்றும் மக்கள் ஜனநாயக கட்சி தலைவரான மெகபூபா திடீரென சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
தனது கட்சியின் பூத் முகவர்களை போலீசார் கைது செய்து வருவதாகவும் எந்த குற்றமும் செய்யாத அவர்களை கைது செய்துவிட்டு தேர்தலில் முறைகேடு நடக்க முயற்சி செய்வதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்

முன்னாள் முதல்வர் மெகபூபா அனந்தனாக் தொகுதியில் போட்டியிடும் நிலையில் அந்த தொகுதியில் தான் தனது கட்சியின் பூத் முகவர்கள் கைது செய்யப்படுவதாக அவர் குற்றம் காட்டி உள்ளார்.

Related Posts

Leave a Comment