சிறப்பு ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வை அறிவித்த தமிழக அரசு.!

by Editor News

சிறப்பு ஆசிரியர், தசைப் பயிற்சியாளர்களுக்கான மதிப்பூதியம் ரூ.14,000லிருந்து ரூ.18,000ஆக உயர்த்தி வழங்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அனைவருக்கும் கல்வி திட்டத்தின் மூலம் தொகுப்பூதியத்தின் அடிப்படையில் பகுதி நேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு வந்தனர். அதேபோல் தமிழக அரசு பள்ளிகளில் மாற்றுத்திறன் மாணவர்களை பயிற்றுவிக்க தொகுப்பூதிய முறையில் சிறப்பு ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

ஊதிய உயர்வு வழங்க வலியுறுத்தி சமீபத்தில் சிறப்பு ஆசிரியர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். அதனை தொடர்ந்து அரசு பள்ளிகளில் பணியாற்றி வரும் சிறப்பு ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படும் என தமிழக அரசு உறுதி அளித்தது.

இந்நிலையில் சிறப்பு ஆசிரியர், தசைப் பயிற்சியாளர்களுக்கான மதிப்பூதியம் ரூ.14,000லிருந்து ரூ.18,000ஆக உயர்த்தி வழங்க தமிழக அரசு இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கென ரூ.21.79 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment