சமந்தா இடத்தை தட்டிதூக்கிய இளம் நடிகை… புஷ்பா 2 குத்துப்பாட்டுக்கு களமிறங்கப் போகும் நடிகை!

by Editor News

2012 ஆம் ஆண்டு சுகுமார் இயக்கத்தில் தெலுங்கு உலக டாப் நடிகர் அல்லு அர்ஜுன், நடிகை ரஷ்மிக்கா மந்தனா நடிப்பில் வெளியானது புஷ்பா திரைப்படம்.

அதிரடி ஆக்ஷன் படமாக உருவான இந்த திரைப்படம் வெளியாகி உலகளவில் மாஸ் ஹிட் அடித்தது. ஆக்ஷன் காட்சிகள்,பாடல், வசனம், திரைக்கதை என படம் சூப்பர் டூப்பர் ஹிட்.

படத்தின் மாஸ் ஹிட்க்கு அனைவரும் அறிந்த மற்றொரு முக்கிய காரணமும் உண்டு. சமந்தாவின் கவர்ச்சி நடனம்தான் அது. இதுவரை காட்டாத கவர்ச்சி, உடலை வளைத்து நெளித்து ஆடிய நடனம், கிளாமர் உடை என ‘ஊ சொல்றியா’ பாடலுக்கு தனது நடனத்தால் ரசிகர்களை கிறங்கடித்தார் சமந்தா.

சமந்தாவின் கவர்ச்சி டான்ஸை பார்ப்பதற்காகவே திரையரங்குகளில் ரசிகர்கள் பலர் குவிந்தனர். புஷ்பா படத்தின் மாபெரும் ரீச்சுக்கு இதுவும் ஒரு முக்கிய காரணம் என்றே கூறலாம்.

புஷ்பா படத்தின் வெற்றியை தொடர்ந்து தற்போது புஷ்பா 2 : தி ரூல் படம் தயாராகி வருகிறது. இந்தியாவில் பெங்காலி மொழியிலும் வெளியாகும் முதல் பான் இந்தியா படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படத்தில் முதல் பாகத்தை போலவே அசத்தலான குத்தாட்டம் ஒன்று நிச்சயம் இருக்கும் என்று கூறப்பட்டு வந்த நிலையில், இந்த முறை சமந்தா ஆடவில்லை என்றும் கூறிவந்தனர். மேலும் புஷ்பா 2 படத்தில் கவர்ச்சி குத்தாட்டம் போட எந்த நடிகையை தேர்ந்தெடுப்பார்கள் என்ற எதிர்பார்ப்பும் நிலவி வந்தது.

தற்போது புஷ்பா 2 படத்தில் அனிமல் படத்தின் மூலம் தற்போது சென்சேஷனல் நடிகையாக வலம் வரும் நடிகை ட்ரிப்டி டிம்ரி தேர்வாகியுள்ளார் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

புஷ்பா 2 படத்தில் ஒரே ஒரு பாடலுக்கு இவர் நடனமாடவுள்ள நிலையில், முதல் பாகத்தில் சமந்தா ஆடிய நடனத்தை இவர் மிஞ்சுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.

Related Posts

Leave a Comment