119
வங்க கடலில் உருவாகியுள்ள புயல் காரணமாக அந்தமானுக்கு இயக்கப்படும் தமது விமான சேவைகளை ஏர் இந்தியா விமான நிறுவனம் இரத்துச் செய்துள்ளது.
வங்கக் கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தம் மண்டலம் ரெமல் புயலாக வலுப்பெறுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும் இவ்விடயம் குறித்து பயணிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.