இன்றைய ராசிபலன்(25.05.24)

by Editor News

மேஷம்:

சமூகத் துறைகளில் பணிபுரிபவர்களுக்கு இன்றைய நாள் நல்ல நாளாக இருக்கும். பணியிடத்தில் இன்று சில புதிய பணிகள் உங்களுக்கு ஒதுக்கப்படலாம். இதனால் பணிச்சுமை அதிகரிப்பதால் சிரமப்படுவீர்கள். உங்கள் உறவினர் ஒருவருடன் நீங்கள் வாக்குவாதம் செய்யலாம், இதனால் குடும்பத்தில் பிரச்சனை ஏற்படலாம். இன்று வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்க வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: பர்பிள்
அதிர்ஷ்ட எண்: 10

ரிஷபம்:

இன்று உங்களுக்கு இயல்பான நாளாக இருக்கும். உங்கள் பேச்சின் மூலம் பிறரை உங்கள் பக்கம் ஈர்ப்பதில் வெற்றி பெறுவீர்கள், இதன் உங்கள் முக்கிய வேலை எளிதாக முடியும். இன்று உங்கள் வாழ்க்கை துணையுடன் எந்தவொரு வாக்குவாதத்திலும் ஈடுபடுவதை தவிர்க்க வேண்டும். குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு திருமணம் சம்பந்தமாக இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும், இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும். கடந்த காலத்தில் நீங்கள் செய்த சில தவறுகளுக்கு இன்று நீங்கள் மன்னிப்பு கேட்க வேண்டியிருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்: 1

மிதுனம்:

இன்று உங்களுக்கு சாதகமான பலன்கள் கிடைக்கும் நாளாக இருக்கும். பயணம் செய்யவோ அல்லது சுற்றுலா செல்ல வாய்ப்பு கிடைத்தால் உங்கள் பெற்றோரிடம் ஆசிர்வாதம் வாங்கி விட்டு செல்லுங்கள். நீண்ட நாள் பிரச்சனைகளில் இருந்து இன்று நீங்கள் விடுபடுவீர்கள், இதன் காரணமாக நீங்கள் நிம்மதிப் பெருமூச்சு விடுவீர்கள். இன்று பணியிடத்தில் சூழ்நிலை உங்களுக்கு சாதகமாக இருக்கும். மாணவர்கள் படிப்பில் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: பர்கண்டி
அதிர்ஷ்ட எண்: 11

கடகம்:

இன்றைய நாள் உங்களுக்கு செலவுகள் நிறைந்த நாளாக இருக்கும். இன்று வீண் செலவுகளை தவிர்க்க வேண்டும், இல்லையெனில் உங்கள் சேமிப்பு கரையும். பிறரின் குடும்ப விஷயங்களில் நீங்கள் அதிகம் தலையிட வேண்டாம், இல்லையெனில் அது உங்களுக்கு அவப்பெயரை ஏற்படுத்தலாம். வணிகர்களின் தொழில் வாழ்வில் புதிய ஒப்பந்தம் இன்று முடியலாம், இதனால் விருப்பப்படி லாபம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: கிரே
அதிர்ஷ்ட எண்: 8

சிம்மம்:

இன்று உங்களுக்கு சுமூகமான நாளாக இருக்கும். சில தடைகள் இருந்தபோதிலும், நீங்கள் விரும்பிய பலன்களைப் பெறுவீர்கள். இன்று உங்களின் பொருளாதார நிலை வலுவாக இருக்கும். மாணவர்கள் சில பிரச்சனைகளை சந்திக்க நேரிடும், அதை அவர்கள் பெற்றோருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். இன்று உங்கள் வீட்டின் பெரியவர்களுக்குக் கீழ்ப்படிவது நல்லது. திருமண ஏற்பாடு கைகூடி வரும்
அதிர்ஷ்ட நிறம்: மெரூன்
அதிர்ஷ்ட எண்: 3

கன்னி:

இன்று உங்கள் வருமானம் அதிகரிக்கும் நாளாக இருக்கும். வியாபாரம் செய்பவர்கள் அபரிமிதமான பலன்களைப் பெறுவார்கள். உங்கள் வாழ்க்கை துணையிடம் இன்று நீங்கள் எதையும் மறைக்காதீர்கள், பின்னாளில் விஷயம் தெரிந்தால் குடும்பத்தில் பிரச்சனை பெரிதாகலாம். அலுவலகத்தில் உங்கள் நற்பெயரை கெடுக்க முயற்சிகள் நடக்கலாம், எனவே நீங்கள் கவனமாக இருக்க வேண்டும்.
அதிர்ஷ்ட நிறம்: கருப்பு
அதிர்ஷ்ட எண்: 9

துலாம்:

கடந்த சில நாட்களாக அதிகரித்து வரும் தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்த இன்று உங்களால் முடிந்தவரை முயற்சிக்க வேண்டும், இல்லையெனில் மோசமான பொருளாதார நிலையை சந்திக்க வேண்டியிருக்கும். குடும்பத்தில் எழும் சிக்கல்களை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முயற்சிக்க வேண்டும். மாணவர்கள் படிப்பில் மிகுந்த ஆர்வம் காட்டுவார்கள் இன்று போட்டிகளிலும் கலந்து கொள்ளலாம், வெற்றி கிட்டும். பணியிடத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பிங்க்
அதிர்ஷ்ட எண்: 6

விருச்சிகம்:

இன்று உங்களுக்கு பிரச்சனைகள் நிறைந்த நாளாக இருக்கும். மாலை நேரம் ஆன்மீக நடவடிக்கைகளில் நாட்டம் கொள்வீர்கள், உங்கள் மனதில் இருக்கும் குழப்பங்களுக்கு தீர்வு கிடைக்கும். அரசு வேலையில் இருப்பவர்கள் இன்று சிறந்த வாய்ப்புகளைப் பெறலாம். நிலுவையில் உள்ள பணத்தைப் பெறுவதன் மூலம், உங்கள் செலவுகளை எளிதாக சமாளிக்க முடியும். பல நாட்களுக்கு பிறகு இன்று உங்களின் மன உளைச்சல் சற்று குறையும்.
அதிர்ஷ்ட நிறம்: மெஜந்தா
அதிர்ஷ்ட எண்: 5

தனுசு:

இன்று உங்களின் திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். பழைய நண்பரை சந்திப்பீர்கள், உங்கள் பழைய நினைவுகளில் மூழ்கி போவீர்கள். குடும்பத்தில் ஏதேனும் தகராறு ஏற்பட்டால் மூத்த குடும்ப உறுப்பினர்களின் உதவியுடன் பேசி தீர்க்க முயற்சி செய்யவும். இன்று உங்கள் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். முக்கிய முதலீடு விஷயங்களில் முடிவெடுக்கும் முன் அனுபவம் வாய்ந்த நபர்களிடம் ஆலோசனை கேட்கலாம்.
அதிர்ஷ்ட நிறம்: கிரீம்
அதிர்ஷ்ட எண்: 4

மகரம்:

பொருளாதார ரீதியாக இன்று உங்களுக்கு நல்ல நாளாக இருக்கும். உங்கள் வாழ்க்கைத்துணையின் முன்னேற்றத்தைக் கண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். வியாபாரம் செய்பவர்கள் இன்று சில பிரச்சனைகளைச் சந்திக்க நேரிடும். பணியிடத்தில் உங்கள் எதிரிகளிடம் கவனமாக இருக்க வேண்டும். உங்களின் இமேஜை கெடுக்கும் முயற்சியில் ஈடுபடுவார்கள். புதிய நபர்களின் ஆலோசனையை பின்பற்றி பணத்தை முதலீடு செய்தால், அது உங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும்.
அதிர்ஷ்ட நிறம்: லாவெண்டர்
அதிர்ஷ்ட எண்: 7

கும்பம்:

இன்று உங்கள் சுற்றுப்புறத்தில் உள்ளவர்களுடன் நீங்கள் அன்பான உறவைப் பேண வேண்டும். உங்களுக்கு எதிரிகள் இருந்தால் அவர்களிடம் இன்று நீங்கள் கவனமாக இருக்க வேண்டும். நீண்ட நாட்களாக நீடித்து வந்த குடும்ப பிரச்சனைகளிலிருந்து இன்று விடுபடுவீர்கள். புதிய நட்புகளை நீங்கள் ஏற்படுத்திக் கொள்வீர்கள் உங்களின் சில கனவுகள் நிறைவேறும் என்பதால் மகிழ்ச்சி அடைவீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
அதிர்ஷ்ட எண்: 12

மீனம்:

இன்றைய நாள் உங்கள் குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு உங்களுக்கு வலு சேர்க்கும். வாழ்க்கைத் துணையுடன் மகிழ்ச்சியாக பயணம் செய்ய திட்டமிடுவீர்கள். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த சில வேலைகளை செய்து முடிப்பதால் மகிழ்ச்சி அடைவீர்கள். குடும்பத்தில் உற்சாக சூழல் இருக்கும். பிறருக்கு உதவ வாய்ப்பு கிடைத்தால் கண்டிப்பாக செய்யுங்கள். புதிய தொழில் தொடங்குபவர்களுக்கு இன்று லாபம் கிடைக்கும் நாளாக இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு
அதிர்ஷ்ட எண்: 2

Related Posts

Leave a Comment