95
2ஆவது நாளாக தாய்வான் எல்லையில் சீனா போர்ப்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றமை உலகநாடுகளிடையே பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
தாய்வானின் கின்மென், மாட்சு மற்றும் டோங்கி தீவுகளை சுற்றியுள்ள பகுதிகளில் சீனா 2-வது நாளாக போர்ப்பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றது. சீனாவின் இந்த செயலுக்கு தாய்வான் ஜனாதிபதி லாய் சிங்-தே கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும் இதுபோன்ற ஆத்திரமூட்டும் நடவடிக்கையை சீனா கைவிட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். இந்தச் சூழலில், தாவானின் பிரிவினைவாத நடவடிக்கைக்கு தண்டனையாக இந்த 2 நாள் போர் ஒத்திகையைத் தொடங்கியுள்ளதாக சீனா அறிவித்துள்ளது. 2 நாள் போர் ஒத்திகை பயிற்சியில் இராணுவம், கடற்படை, விமானப் படை, ஆகியவை பங்கேற்றுள்ளன.