குழம்பு, கிரேவி, கூட்டு எதுல காரம் அதிகமானாலும் இப்படி செய்ங்க.. காரம் குறைஞ்சிடும்!

by Editor News

நாம் சமைக்கும் கிரேவி அல்லது குழம்புகளில் சில நேரங்களில் உப்பு அல்லது காரம் அதிகமாகிவிடும். இவ்வாறு உணவுப் பொருட்களில் அதிகரித்த காரத்தை சில எளிய டிப்ஸ்கள் மூலம் சரி செய்து விடலாம் தெரியுமா..

அப்புறம் என்ன..? இனி நீங்கள் வைக்கும் குழம்புகளில் காரம் அதிகமானால் கவலைப்படாமல் கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸ்களைப் பயன்படுத்தி உணவுகளில் அதிகமான காரத்தை சுலபமாக குறைக்கலாம். இதோ, அது என்னென்ன என்பது குறித்து முதலில் தெரிந்துக் கொள்ளலாம் வாருங்கள்.

தயிர்:

நீங்கள் சமைக்கும் உணவுகளில் காரம் அதிகமாகிவிட்டால், எவ்வித பதற்றமும் இல்லாமல் அதில் கொஞ்சம் தண்ணீர் சேருங்கள். அப்படியும், காரம் குறையவில்லையென்றால், சுவை மாறாத படிக்கு, அதில் கொஞ்சம் தயிர் சேர்த்தால், காரம் சுலலமாக குறைத்து விடும்.

எலுமிச்சை சாறு:

நீங்கள் செய்த குழம்பு அல்லது கிரேவிகளில் காரம் அதிகரித்து விட்டால், அதில் கொஞ்சம் எலுமிச்சை சாறு சேர்த்தால், காரம் குறைந்துவிடும். இதோடு அரிசி மாவு அல்லது கடலை மாவை சிறிதளவு தண்ணீரில் கரைத்து குழம்பில் சேர்த்தால், அதில் இருக்கும் அதிகப்படியான மசாலாவை உறிஞ்சிவிடும்.

காய்கறிகளைச் சேர்த்தல்:

சமைத்த உணவில் காரம் அதிகரித்தால், அதைக் குறைக்க கேரட், வெங்காயம், தக்காளி போன்ற காய்கறிகளைப் பொடியாக நறுக்கி குழம்பில் போட்டால், குழம்பில் காரம் குறைந்து விடும்.

வேர்க்கடலை பேஸ்ட்:

காரக்குழம்பு, சாம்பார், மட்டன் கிரேவி, சிக்கன் கிரேவி போன்றவற்றில் காரம் அதிகமாகி விட்டால், வறுத்த வேர்க்கடலையை பேஸ்ட் போல அரைத்து அதில் சேர்த்தால், காரத்தன்மை குறைந்துவிடும். இது போன்று முந்திரியையும் நீங்கள் பயன்படுத்தலாம்.

சர்க்கரை அல்லத கெட்ச் அப்:

சிக்கன் கிரேவி, பன்னீர் பட்டர் மசாலா உள்ளிட்ட பல்வேறு குழம்புகளை செய்யும் போது, அதில் காரம் அதிகமாகிவிட்டால், கிரேவியில் சிறிதளவு சர்க்கரை அல்லது கெட்ச் அப்பைச் சேர்க்கவும். இவை உணவில் உள்ள காரத்தன்மையை குறைக்க உதவியாக இருக்கும்.

இதுபோன்ற சின்ன சின்ன சமையல் டிப்ஸ்களைப் பயன்படுத்தி சமைக்கும் உணவில் அதிகமாகும் காரத்தை மிகவும் சுலபமாக குறைக்கலாம். இனி நீங்களும் உங்களது வீடுகளில் இதுபோன்று ட்ரை பண்ண முயற்சி செய்யுங்கள்.

Related Posts

Leave a Comment