90
பிரித்தானியாவில் ஜூலை 4 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளதாக அந்நாட்டின் பிரதமர் ரிஷி சுனக் அறிவித்துள்ளார்.
நேற்றைய தினம் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்துக்குப் பின்னரே பிரதமர் ரிஷி சுனக் குறித்த அறிவிப்பை வெளியிட்டு இருந்தார்.
44 வயதான ரிஷி சுனக், பிரதமராக முதல் முறையாக வாக்காளர்களை எதிர்கொள்ளப் போகின்ற தேர்தல் இதுவாகும்.
ஜூலையில் நடைபெற உள்ள குறித்த தேர்தலானது கடந்த 2016 ஆம் ஆண்டு பிரெக்சிட் வாக்கெடுப்புக்குப் பின்னர் நடைபெறவுள்ள மூன்றாவது பொதுத் தேர்தல் என்பதும் குறிப்பிடத்தக்கது.