சிங்கப்பூரையடுத்து இந்தியாவிலும் பரவிவரும் புதிய கொரோனா!

by Editor News

சிங்கப்பூரில் பரவி வருகின்ற புதிய வகை கொரோனா, இந்தியாவின் சில பகுதிகளில் பரவ ஆரம்பித்துள்ளதாக இந்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்திய சுகாதாரத்துறையினரால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்தியாவில் 324 பேருக்கு இந்த புதிய வகை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இருப்பினும் குறித்த தொற்றுப் பரவலினால் அச்சமோ, பதற்றமோ கொள்ளத் தேவையில்லை எனவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது சிறந்தது என்றும் இந்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. எனவே பொது இடங்களுக்கு செல்லும் போது முகக்கவசம் அணிந்து செல்லுமாறு இந்திய சுகாதாரத்துறை பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Related Posts

Leave a Comment