90
இந்தியாவின் ஐந்தாம் கட்ட நாடாளுமன்றத் தேர்தலில் 49 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு இன்று ஆரம்பமாகியுள்ளது.
குறிப்பாக உத்திரபிரதேசத்தில் 14 தொகுதிகளிலும், மகாராஷ்டிராவில் 7 தொகுதிகளிவும், பீகார் மற்றும் ஒடிசாவில் தலா 5 தொகுதிகளில் வாக்குபதிவு நடை பெற்று வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த 49 தொகுதிகளில் மொத்தம் 695 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர் எனவும் இன்று மாலை 6 மணி வரை வாக்குபதிவு நடைப்பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் மொத்தமுள்ள 543 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.