தேவையான பொருட்கள் :
தயிர் – 1 கப்
சாதம் – 1/2 கப்,
உப்பு – 1 ஸ்பூன்
எண்ணெய் – 2 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 ஸ்பூன்
சீரகம் – 1/2 ஸ்பூன்
கடுகு – 1/2 ஸ்பூன்
சிவப்பு மிளகாய் – 2
பச்சை மிளகாய் – 3 நீளவாக்கில் நறுக்கியது
இஞ்சி – 1 ஸ்பூன்
கறிவேப்பிலை – சிறிது,
பொடித்த மிளகு – 1/2 ஸ்பூன்,
பெருங்காய தூள் – 1/2 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
கொத்தமல்லி இலை – தேவையான அளவு
செய்யும் முறை :
முதலில் தயிரை ஒரு மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்து கெள்ள வேண்டும். பின்னர் வெள்ளை சாதத்தை மசித்து வைத்து கொள்ள வேண்டும்.
இப்போது மசித்த சாதத்துடன் இந்த தயிரை சேர்த்து கெள்ள வேண்டும். பின்னர் அடுப்பில் ஒரு பாத்திரத்தை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும்
அதில் எண்ணெய் ஊற்றி, உளுத்தம் பருப்பு, சீரகம், கடுகு, சிவப்பு மிளகாய், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, பொடித்த மிளகு, பெருங்காய தூள்,மஞ்சள் தூள் ஆகியவற்றை சேர்த்து வறுத்து தயிர் கலந்த சாதத்துடன் சேர்த்து நன்கு கலந்து விடவும். இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விட்டால் டேஸ்டியான கோயில் ஸ்டைல் தயிர் சாதம் தயார்.