அதிக அளவு கொழுப்பு மாரடைப்பு அல்லது பக்கவாதம் போன்ற பயங்கரமான உடல்நலப் பிரச்சினையின் ஆரம்ப அறிகுறியாக இருக்கலாம். மோசமான உணவு பழக்கங்கள், உங்கள் இரத்த ஓட்டத்தில் கட்டுப்பாடற்ற கெட்ட கொலஸ்ட்ரால் அளவுகளுக்கு காரணமாக இருக்கலாம்.
இது அதிக கொழுப்பு அல்லது சர்க்கரை உணவு முதல் அதிக பிஎம்ஐ வரை இருக்கும். நீங்கள் ஒரு செயலற்ற வாழ்க்கை முறையைக் கொண்டிருந்தால், கொலஸ்ட்ரால் பிரச்சினைகள், அதைத் தொடர்ந்து நாள்பட்ட நோய்கள் உருவாகும் வாய்ப்புகள் அதிகம்.
வழக்கமான உடற்பயிற்சியைத் தவிர, கொலஸ்ட்ராலைச் சிறப்பாகச் சமாளிக்க ஒருவர் உணவை மாற்றியமைக்க வேண்டும். நார்ச்சத்து, பழங்கள், காய்கறிகள், ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் சில மூலிகைகள் ஆகியவற்றைச் சேர்ப்பது கொழுப்பைக் குறைக்க உதவும்..
உடலில் உற்பத்தி செய்யப்படும் மெழுகு போன்ற ஒரு பொருளான கொலஸ்ட்ரால், பல முக்கிய செயல்பாடுகளைக் கொண்டுள்ளது, இதனால் நமக்கு முக்கியமானது. ஆனால், உணவில் அதிகமாகச் சேர்க்கும்போது, உடல் செயல்பாடுகளைச் சேதப்படுத்தத் தொடங்குகிறது. நல்ல கொலஸ்ட்ரால் அளவை மேம்படுத்துவதன் மூலம் கெட்ட கொழுப்பின் ஆபத்தில் இருந்து விடுபட முடியும். இயற்கையாகவே கொலஸ்ட்ரால் அளவைக் குறைக்க சூப்பர்ஃபுட்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
பூண்டு
பூண்டை உங்கள் சமையலில் சேர்த்துக்கொள்வதன் மூலம் கொழுப்பின் அளவை குறைக்க முடியும். தொடர்ந்து 12 வாரங்களுக்கு உறங்கும் நேரத்தில் சாப்பிட்டு, இரத்தத்தின் செயல்பாடு மேம்படுவதை பார்க்க முடியும்..மூலம் கொழுப்பின் அளவை குறைக்கலாம்.
பார்லி
ப்ரீபயாடிக் பீட்டா-குளுக்கன் உள்ளது, இது கொழுப்பைக் குறைக்க உதவுகிறது. பார்லி கிச்சடி, பார்லி கஞ்சி, பார்லி சூப் மற்றும் பார்லி ரொட்டி போன்ற பல வடிவங்களில் இதை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் கெட்டக் கொழுப்பின் அளவை குறைக்க முடியும்.
திரிபலா
ஒரு தாய் தன் குழந்தைகளை கவனித்துக்கொள்வது போல், திரிபலாவும் உடலின் உட்புறத்தை கவனித்துக்கொள்கிறது என்று ஒரு பழமொழி கூறப்படுகிறது. இதனை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் கெட்ட கொழுப்பை குறைக்க முடியும்.
மோர்
மோரில் மஞ்சள் தூள், கல் உப்பு, கறிவேப்பிலை மற்றும் துருவிய இஞ்சி சேர்க்கவும். ஒவ்வொரு நாளும் ஒரு முறை சாப்பிடுங்கள், 3 மாதங்களுக்குப் பிறகு உங்கள் கொலஸ்ட்ரால் அளவு மேம்படுவதை பார்க்க முடியும்.
நெல்லிக்காய் :
கொலஸ்ட்ராலுக்கு சிறந்த வீட்டு வைத்தியங்களில் ஒன்று நெல்லிக்காய். 12 வாரங்கள் தொடர்ந்து நெல்லிக்காயை சாப்பிடுவதன் மூலம், கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவும். எனினும் சீரான வாழ்க்கை முறை உங்களிடம் இல்லையென்றால் இந்த சூப்பர் உணவுகள் வேலை செய்யாது. சரியான நேரத்தில் சாப்பிட்டு, தூங்கி, உடற்பயிற்சி மேற்கொண்டு சீரான ஆரோக்கிய வாழ்க்கையை மேற்கொள்வதன் கெட்ட கொழுப்பை கரைக்க முடியும்..