56
தென்காசி பழைய குற்றால அருவியில் நெல்லையை சேர்ந்த சிறுவன் அஸ்வின்(17) தனது குடும்பத்தாருடன் குளித்துக்கொண்டிருந்த நிலையில் திடீர் வெள்ளப்பெருக்கில், அந்தச் சிறுவன் அடித்துச் செல்லப்பட்டார். மேலும், அவர் உட்பட 5 பேர் அந்த வெள்ளப்பெருக்கில் அடித்து செல்லப்பட்டனர். அதில், 4 பேரை அங்கிருந்தவர்கள், நல்வாய்ப்பாக மீட்ட நிலையில் சிறுவன் அஸ்வின் சடலமாக மீட்கப்பட்டார். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில் குற்றால அருவிகளுக்கு செல்ல தடை மறு உத்தரவு வரும் வரை, தென்காசி மாவட்ட அணைகள், குற்றால அருவிகளுக்கு செல்ல சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அருவியில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கில் சிக்கி சிறுவன் உயிரிழந்த நிலையில் மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.