செளந்தரபாண்டி செய்த கொலை… பழியை ஏற்க போகிறாரா சூடாமணி…

by Editor News

தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் தினமும் இரவு 8.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் அண்ணா. இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் பிளாஷ்பேக்கில் சௌந்தரபாண்டி கோவில் நகையை திருட பிளான் போட்டு கேரளாவில் இருந்து ஒரு திருடனை இறக்கி இருந்த நிலையில் இன்று நடக்க போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. அதாவது, சூடாமணிக்கு விடியற்காலையில் முருகன் கனவில் தோன்றி என்னுடைய நகையை திருட பார்க்கிறாங்க என்று சொல்ல, கண் முழித்து விடும் சூடாமணி கோவிலுக்கு கிளம்பி வருகிறாள்.

கோவிலில் சனியனும் கேரளா திருடனும் முகமூடி அணிந்து நகையை திருடி கொண்டு வெளியே வர, சூடாமணி அதை பார்த்து விடுகிறாள். சனியன் சூடாமணியை பிடித்து கொண்டு கேரளா திருடனை தப்பிக்க வைத்து விட்டு அவளை தள்ளி விட்டு எஸ்கேப் ஆக, சூடாமணி போலீசில் பிடித்து கொடுக்கிறேண்டா என்று கிளம்பி செல்ல, சனியன் சௌந்தரபாண்டிக்கு போனை போட்டு விஷயத்தை சொல்லி சூடாமணியை தடுத்து நிறுத்த சொல்கிறான்.

அதன் பிறகு சௌந்தரபாண்டி அங்கு வந்து முதலில் திருடனை பிடிக்கலாம், அதுக்கப்புறம் போலீசில் புகார் கொடுக்கலாம் என்று சொல்ல, சூடாமணி போலீசுக்கு சொல்லலாம் என்று சொல்கிறாள். அதன் பிறகு சௌந்தரபாண்டி ஒரு வழியாக சூடாமணியை தடுத்து நிறுத்தி கேரளா எல்லைக்கு வந்த திருடனை பிடித்து நீ இங்கேயே இரு, அவனை பிடித்து நகையை வாங்கிட்டு வரேன் என்று தனியாக வருகிறார் சௌந்தரபாண்டி. நீ திருடியதை அவ பார்த்துட்டா அவளை கொன்னுடு என்று திருடனிடம் சொல்ல, திருடறது தான் என் வேலை நான் கொலை பண்ண மாட்டேன் என்று சொல்கிறான்.

இதனால் திருடனுக்கு சனியன், சௌந்தரபாண்டிக்கும் ஏற்பட்ட தள்ளு முள்ளுவில் சௌந்தரபாண்டி திருடனை குத்தி கொன்னு விடுகிறார். பிறகு சனியனிடம் பழியை ஏற்றுக்கொள்ள சொல்ல அவன் நோ சொல்ல, அக்கா பாண்டியம்மாவிடம் உதவி கேட்க அவளும் நோ சொல்கிறாள். இதனால் சூடாமணியிடம் பழியை ஏற்றுக்கொள்ள சொல்லி பேச செல்கிறார் சௌந்தரபாண்டி. இப்படியான நிலையில் அடுத்து நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அண்ணா சீரியலை மிஸ் பண்ணாம பாருங்க.

Related Posts

Leave a Comment