உக்ரைன் மீதான போருக்கு அரசியல் ரீதியில் விரைவில் தீர்வு ஏற்படும். இதில் தேவைப்படும் அனைத்து உதவிகளையும் சீனா செய்யும் என ரஷ்ய, சீன ஜனாதிபதிகள் அறிவித்துள்ளனர்.
சீனாவுக்கு இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று முன்தினம் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் சீனாவுக்கு விஜயம் செய்தார்.
இதன்போது, சீன ஜனாதிபதி ஷீ ஜின்பிங் மற்றும் ரஷ்ய விளாடிமிர் புடின் நேற்று சந்தித்து, இரு தரப்பு உறவுகள் குறித்து விரிவாக கலந்துரையாடியுள்ளனர்.
மேலும், இவர்கள் வெளியிட்ட கூட்டறிக்கையில்,
சீனா, ரஷ்யா இடையே நல்ல நட்பு உள்ளது. இதை யாராலும் சீர்குலைக்க முடியாது. எந்தத் தடை இருந்தாலும், எங்களுடைய நட்பு தொடரும். எங்களுடைய உள்நாட்டு விவகாரங்கள், நட்பு மற்றும் இறையாண்மை மீதான மூன்றாம் நாடுகளின் தலையீட்டை எதிர்க்கிறோம். உக்ரைன் மீதான போருக்கு விரைவில் அரசியல் ரீதியில் தீர்வு ஏற்படும். இதில் தேவைப்படும் அனைத்து உதவிகளையும் சீனா செய்யும் என குறிப்பிடப்பட்டள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
அத்துடன், இருதரப்பு இடையே பல்வேறு ஒப்பந்தங்களும் கையெழுத்தாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.