Guruvayoor Ambalanadayil: திரை விமர்சனம்

by Editor News

பிரித்விராஜின் தங்கை அனஸ்வரா ராஜனை திருமணம் செய்யப்போகிறார் வெளிநாட்டில் வேலை பார்க்கும் பசில் ஜோசப். ஆனால் பழைய காதலியை மறக்க முடியாமல் அவர் தவிக்கிறார்.

அவரது நிலைமையை புரிந்துகொண்ட பிரித்விராஜ் செல்போனிலேயே ஆறுதல் கூறி, அவருக்காக பக்க பலமாக தான் இருப்பதாக கூறுகிறார்.

பிரித்விராஜின் பேச்சில் அவர் மீது அன்பும், மரியாதையும் அதிகரிக்க இந்தியாவுக்கு வரும் பசில் ஜோசப்பிற்கு அதிர்ச்சி காத்திருக்கிறது.

அதன் பின்னர் தனது திருமணத்தில் உள்ள பிரச்சனையை அவர் எப்படி சமாளிக்கிறார், அனஸ்வரா ராஜனை திருமணம் செய்தாரா இல்லையா என்பதே படத்தின் கதை.

ஜெய ஜெய ஜெய ஜெய ஹே எனும் சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த விபின் தாஸ் இப்படத்தை இயக்கியிருக்கிறார்.

படம் தொடங்கியது முதலே காமெடி சரவெடி ஆரம்பமாகிறது. பசில் ஜோசப் ‘ஆனந்த் ஏட்டா’ என்று ஒவ்வொரு முறை அழைக்கும்போதும், அதற்கு பிரித்விராஜ் கொடுக்கும் ரியாக்ஷனும் அரங்கில் சிரிப்பலையை உண்டாக்கிறது.

பசில் ஜோசப்பும், பிரித்விராஜும் தான் படம் முழுக்க ஸ்கோர் செய்கிறார்கள். அவர்களை ஒப்பிடும்போது கதாநாயகிகளுக்கு பெரிய வேலை இல்லை.

”அழகிய லைலா” பாடலை வைத்து காமெடி செய்துதிருக்கும் இடங்கள் சிறப்பு. ஒவ்வொரு காட்சிக்கும் காமெடி தெறிக்கின்றன.

யோகி பாபுவின் முதல் மலையாள படம் என்றாலும் அவருக்கே உரித்தான பாணியில் சிரிக்க வைக்க முயற்சித்துள்ளார்.

நிகிலா விமல், அனஸ்வரா ஆகியோரும் தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளனர்.

கிளாப்ஸ்
காமெடி காட்சிகள்

தொய்வில்லாத திரைக்கதை

நடிகர்களின் நடிப்பு

பல்ப்ஸ்
இரண்டாம் பாதியில் சில காட்சிகள் ஒர்க்அவுட் ஆகவில்லை மொத்தத்தில் காமெடி அதகளமாக குடும்பத்துடன் பார்க்கக்கூடிய என்டெர்டெய்ன்மென்ட் படமாக வந்திருக்கிறது இந்த ‘குருவாயூர் அம்பலநடயில்’.

Related Posts

Leave a Comment