இந்த ஆண்டு பருவமழை தொடங்குவது எப்போது? வானிலை ஆய்வு மையம் தகவல்..!

by Editor News

ஒவ்வொரு ஆண்டும் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் என்ற நிலையில் இந்த ஆண்டு முன்கூட்டியே பருவமழை தொடங்க வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை தென்மேற்கு பருவமழை மற்றும் வடகிழக்கு பருவமழை ஆகிய இரண்டு மழைகள் தான் நீர் ஆதாரத்திற்கு அடிப்படையாக இருக்கிறது என்பதும் இந்த இரண்டு மழைகளில் சேமித்து வைக்கப்படும் தண்ணீர் தான் வருடம் முழுவதும் பொது மக்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் வழக்கமாக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் முதல் வாரமே தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று வானிலை அறிவிப்பு வெளியாகி வரும் நிலையில் இந்த ஆண்டு கேரளாவில் மே 31ஆம் தேதியை தொடங்கும் என்றும் அதாவது ஒரு வாரத்திற்கு முன்பே தென்மேற்கு பருவமழை தொடங்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு ஜூன் 8-ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில் இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்க உள்ளதாக வெளியான தகவல் காரணமாக பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் வெயிலின் தாக்கமும் இந்த ஆண்டு மிக விரைவில் குறைந்து விடும் என்றும் கோடை வெயிலின் உக்கிரம் இந்த ஆண்டு பெரிய அளவில் இருக்காது என்றும் கூறப்பட்டு வருகிறது.

Related Posts

Leave a Comment