2 நாள் ஏற்றத்திற்கு பின் திடீரென மீண்டும் சரிந்த பங்குச்சந்தை.. சென்செக்ஸ், நிப்டி நிலவரம்..!

by Editor News

கடந்த இரண்டு நாட்களாக பங்குச்சந்தை உயர்ந்த நிலையில் இன்று திடீரென மீண்டும் பங்குச்சந்தை சரிந்து உள்ளது முதலீட்டாளர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் குறைந்த அளவே சரிந்து உள்ளதால் இன்று மதியத்திற்கு மேல் பங்குச்சந்தை உயர வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது. இந்த நிலையில் இன்றைய சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி நிலவரத்தை பார்ப்போம்.

இன்று பங்குச் சந்தை தொடங்கியதில் இருந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் நிலையில் சற்றுமுன் மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 45 புள்ளிகள் சரிந்து 73,054 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது

ஆனால் அதே நேரத்தில் நிப்டி இரண்டு புள்ளிகள் உயர்ந்து 22,222 என்ற புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. பங்குச்சந்தை மிகவும் குறைந்த அளவில்தான் சரிந்துள்ளதால் முதலீட்டாளர்கள் அச்சம் பெற தேவையில்லை என்று பங்குச்சந்தை நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இன்றைய பங்குச்சந்தையில் ஆக்சிஸ் வங்கி, பஜாஜ் பைனான்ஸ், பாரதி ஏர்டெல், ஆகிய பங்குகள் உயர்ந்துள்ளதாகவும் எச்.டி.எப்.சி வங்கி, ஐசிஐசி வங்கி, மாருதி ஆகிய பங்குகள் சரிந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Related Posts

Leave a Comment