சிங்கப்பூர் பிரதமர் திடீர் இராஜினாமா!

by Editor News

சிங்கப்பூரை நீண்ட காலம் ஆட்சி செய்த பிரதமர் லீ சியன் லூங் தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார்.

எனினும் அமைச்சரவையில் முக்கிய பதவியில் அவர் நீடிக்கவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சிங்கப்பூரை இருபது ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆட்சி செய்த லீ இன்று இரவு தனது அதிகாரங்களை நாட்டின் துணைப் பிரதமரும் நிதி அமைச்சருமான லாரன்ஸ் வோங்கிடம் ஒப்படைக்கவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

1965ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்ற சிங்கபூர் நாட்டினை, மூன்று பிரதமர்கள் மட்டுமே ஆட்சி செய்திருந்தனர்.

குறித்த மூன்று பிரதமர்களும் மக்கள் செயல் கட்சியை சேர்ந்தவர்கள் என ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

நாட்டின் முதல் பிரதமர் லீ குவான் யூ தற்போதைய பிரதமரின் தந்தையாவார். லீ குவான் யூ சிங்கப்பூரை 25 ஆண்டுகள் ஆட்சி செய்திருந்தார்.

இந்நிலையில் பிரதமர் லீ சியன் லூங்கின் பதவி விலகலுடன் சிங்கப்பூரின் அரசியல் தலைமைத்துவம் “லீ குடும்பத்தின்” நிழலில் இருந்து விடுபட்டுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

எனினும் தற்போதைய பிரதமர் அந்நாட்டு அமைச்சரவையில் மூத்த அமைச்சராகப் பணியாற்றவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேiளை கடந்த வாரம் இறுதியில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவித்த பிரதமர் லீ சியன் லூங், எல்லோரையும் விடவும் வேகமாக ஓட முயற்சிக்கவில்லை என்றும் அனைவரையும் தன்னுடன் இணைத்து அழைத்துச் செல்லவே முயற்சிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

லீ சியன் லூங்கின் இந்த பதவி விலகலை தொடர்ந்து சிங்கப்பூர் நாட்டில் அரசியிலில் ஒரு அத்தியாயம் நிறைவிற்கு வரவுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Related Posts

Leave a Comment