மகிழ்ச்சியில் குடும்பம்! வேறொரு குணசேகரனிடம் சிக்கிய ஜனனி…

by Editor News

பிரபல ரிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியலில் பல திருப்பங்கள் அரங்கேறி வருகின்றது.

பெண்களின் அடிமைதனத்தை மையமாக எடுக்கப்பட்டுள்ள இந்த சீரியல் பெண்கள் மட்டுமின்றி ஆண்களும் அவதானித்து வருகின்றனர்.

குறித்த சீரியல் பரபரப்பாக சென்று கொண்டிருந்த நிலையில், கடந்த ஆண்டு சீரியலின் நாயகனான குணசேகரன் திடீர் மாரடைப்பினால் உயிரிழந்த நிலையில் அவருக்கு பதில் நடிகர் வேல ராமமூர்த்தி நடித்து வருகின்றார்.

கரிகாலன் குணசேகரன் கூட்டணி
நீண்ட நாட்களாக சுவாரசியமில்லாமல் சென்ற சீரியல் தற்போது சற்று பரபரப்பாக சென்று கொண்டிருந்தது. ஒட்டுமொத்த குடும்பமும் குணசேகரனுக்கு எதிராக நிற்கின்றனர்.

ஞானம் புதிய தொழில் செய்வதாக கூறி கரிகாலனிடம் ஏமாந்து போனார். ஈஸ்வரி குணசேகரனை விவாகரத்து செய்ய வழக்கறிஞரை நாடியுள்ளர்.

இந்நிலையில் கரிகாலன் மற்றும் குணசேகரன் கூட்டணி போட்டுள்ள நிலையில், இதனை அறிந்த குடும்பத்தினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

ஜனனி வெளியே அலுவலகம் ஒன்றிற்கு சென்ற நிலையில், அங்கு ஒரு குணசேகரனை சந்தித்துள்ளார். இதனைக் கேட்ட ரியல் குணசேகரன் அவரை கிண்டல் செய்யும் விதமாக பேசியுள்ளார்.

Related Posts

Leave a Comment