127
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இரண்டு நாட்கள் உத்தியோக பூர்வ விஜயம் மேற்கொண்டு நாளை சீனாவுக்குச் செல்லவுள்ளார்.
சீன ஜனாதிபதி சி ஜின்பிங்கின் விசேட அழைப்பிற்கு இணங்கவே ரஷ்ய ஜனாதிபதி நாளை சீனாவுக்கு பயணமாகவுள்ளார்.
குறித்த விஜயத்தின் உள்நாட்டு மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்ய ஜனாதிபதியாக 5-வது முறையாகப்பதவி ஏற்றதன் பின்னர் புடின் மேற்கொள்ளும் முதல் வெளிநாட்டு பயணம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.