அடுத்த ஐந்து ஆண்டுகளில் உலகம் மிகவும் ஆபத்தான நாடாக பிரித்தானிய மாறும் என, பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
எதிர்வரும் பொதுத்தேர்தலை முன்னிட்டு ஆதரவை திரட்டும் நோக்கில் முன்னெடுக்கப்பட்ட கூட்டம் ஒன்றில் இதனை தெரவித்த பிரிதமர் இதனை தடுக்க தன்னாலே முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதன்போது, உலகை அச்சுறுத்தலாக மாற்றக்கூடியதாக நம்பப்படும் 7 காரணிகளையும் அவர் வெளியிட்டுள்ளார்.
அதன்படி, பயங்கரவாதம், சட்டவிரோத குடியேற்றம், செயற்கை நுண்ணறிவுவுடன் (AI) புதிய தொழில்நுட்பம், அணு ஆயுத ஆபத்து அதிகரிப்பு, தீவிரவாதிகளை பலப்படுத்தும் போக்கு, விளாடிமிர் புடினின் நேட்டோ இலக்கு மற்றும் போர் சூழல் போன்ற காரணிகளை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும், அடுத்த சில ஆண்டுகளில் பிரித்தானியவின் ஜனநாயகம், பொருளாதாரம் மற்றும் சமூகம் ஆகியவை அமைதியற்று காணப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதிலிருந்து விடுபட நாம் எவ்வாறு செயல்பட வேண்டும் என்பதை அடுத்த தேர்தலில் முடிவு செய்ய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.