பரங்கிக்காயில் உள்ள மருத்துவ குணங்கள் அதன் ஆரோக்கிய நன்மைகள்…

by Editor News

பொதுவாக பரங்கிக்காயினை மக்கள் அதிகம் விரும்பி எடுத்துக் கொள்வதில்லை. ஆனால் இந்த பரங்கிக்காயின் இலை முதல் காய் வரை அனைத்தும் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டுள்ளது இது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

பரங்கிக்காயில் வைட்டமின் A ஏராளமாக நிரம்பியிருக்கின்றன.. அதனால், கண்பார்வைக்கும், கண் கோளாறுகளை சரிசெய்யவும் உதவக்கூடியது.. இந்த காயில், வைட்டமின்கள் B, C உள்ளதால், உடம்பில் உள்ள சூட்டை குறைத்து, குளிர்ச்சியை தரக்கூடியது.

அதேசமயம், இருமல் இருந்தாலும் இந்த கீரை சாப்பிட்டால் குணமாகும். மேலும்,சீரான சிறுநீர் வெளியேற்றத்துக்கு இந்த பரங்கிக்காய் பயனளிக்கும்.

பூசணி வகைகளில் 2 வகைகள் இருக்கின்றன. ஒன்று, சர்க்கரை பூசணி, மற்றொன்று வெண்பூசணி.. இந்த சர்க்கரை பூசணியைதான், சர்க்கரைப் பரங்கி அல்லது பரங்கிக்காய் என்பார்கள்.

உடல் எடையை குறைக்க நினைப்பவர்களுக்கு உதவும் காய்.. காரணம், இந்த பரங்கிக்காய் ஜூஸில், பெக்ட்டின் என்ற வேதிப்பொருள் உள்ளது.. இதைக் குடிப்பதனால் கொழுப்பு சத்து குறைந்துவிடும்..

ஹெப்படைட்டிஸ் – A- என்ற வைரஸ் கிருமியை நீக்குவதன் கல்லீரலின் செயல்பாடுகளையும் அதிகரிக்க செய்கிறது.. பரங்கிச்சாறு தலைமுடிக்கும் அருமருந்து என்று கூறலாம்.

இரும்புச்சத்து குறைபாட்டை தீர்க்கும் வல்லமை இந்த பரங்கிக்காய்க்கு உள்ளது.. தூக்கம் வராமல் அவதிப்படுபவர்கள், ஒரு டம்ளர் பரங்கிக்காய் சாறுடன், தேன் கலந்து குடித்து வந்தால் தூக்கம் சுகமாய் வரும்.. கல்லீரலுக்கு இந்த பரங்கிக்காய் நல்லது.

தீப்புண்களை ஆற்றும் தன்மை இந்த குளிர்ந்த காய்க்கு உள்ளது.. அதேபோல கொப்புளங்களையும் குணப்படுத்தும். பித்தத்தை போக்கும் குணம் இந்த பரங்கிக்காய்க்கு உண்டு.

விஷம்வாய்ந்த வண்டுக்கடி இருந்தாலும் உடனே அதை குணப்படுத்தீவிடும்.. இந்த சாறை தலைக்கு தடவி குளிப்பதால் தலைமுடி கொட்டுவது நிற்கும்.. தலைக்கும் குளிர்ச்சிதரக்கூடியது.

பசியை தூண்டுவதுடன், குடல் சம்பந்தமான பிரச்சனைகளையும் நிவர்த்தி செய்யும்.. உடம்பில் நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்களுக்கு அருமருந்துதான் இந்த பரங்கிக்காய். சிறுநீரக கற்களால் பாதிப்பு உள்ளவர்கள், தினமும் 3 வேளை என 10 நாட்களுக்கு பரங்கிக்காய் சாற்றை அரை டம்ளர் குடித்துவந்தால், சிறுநீரக கோளாறுகள் நீங்கும்.

மணல்பாங்கான இடங்களில் விளையும் பரங்கி காய் மிகவும் சுவையாக இருக்குமாம்.. அது கெட்டியாகவும் இருக்கும். பொதுவாக பரங்கிக்காயுடன் பருப்பு சேர்த்து கூட்டு மாதிரி செய்து சாப்பிடலாம். கறி செய்வதற்கும், சாம்பாரில் சேர்ப்பதற்கும் கூட இதை பயன்படுத்திக் கொள்வார்கள்.

ரத்த நாளங்களில் ஏற்பட்ட அடைப்பும் நீங்கும். இதனால், மாரடைப்பு வருவது தடுக்கப்படுகிறது.அத்துடன், வாத குணம் இதிலுள்ளது.. எனினும், சுக்கும், வெந்நீரும் இதனுடன் சேர்ந்து சாப்பிட்டால், எந்தவிதமான கெடுதியும் வராது.

ஒரு டீஸ்பூன் பரங்கி விதையை தினமும் எடுத்துக் கொள்வதன் மூலம் நமது முழு ஆரோக்கியத்தையும் பாதுகாக்கலாம் என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

Related Posts

Leave a Comment