GOAT விரைவில் நடக்கும் Audio Launch.. எங்கே நடக்கபோகுது தெரியுமா?

by Editor News

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான தளபதி விஜயின் “லியோ” திரைப்படம் மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக மாறிய நிலையில், அடுத்தபடியாக பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தனது 68வது படத்தை தளபதி விஜய் நடித்து வருகிறார்.

இப்பட பணிகளை முடித்த பிறகு தனது 69வது படத்தில் நடிக்க உள்ள தளபதி விஜய், அந்த படத்தோடு தனது சினிமா வாழ்க்கைக்கு ஓய்வு கொடுத்துவிட்டு, முழு நேர அரசியல் களத்தில் இறங்க உள்ளது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் தளபதி விஜயின் 68 மற்றும் 69 ஆகிய இரு திரைப்படங்களும் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி வரும் GOAT திரைப்பட பணிகள் ஏறத்தாழ 60% முடிவுற்ற நிலையில், தற்போது GOAT பட குழு அமெரிக்காவில் படபிடிப்பை நடத்தி வருகின்றனர். விரைவில் இப்பட பணிகள் முடிவடைந்து தளபதி விஜயின் கோட் திரைப்பட இசை வெளியீட்டு விழா நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்ற முறை லியோ திரைப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா முதலில் மலேசியாவில் நடத்தப்படும் என்று கூறப்பட்டது. அதன் பிறகு சென்னையில் நடத்த திட்டமிட்டு, இறுதி நேரத்தில் அதற்கு உரிய அனுமதி கிடைக்காத நிலையில், இசை வெளியீட்டு விழா நடக்கவில்லை. இருப்பினும் கோட் திரைப்பட இசை வெளியீட்டு விழா முன்கூட்டியே நல்ல திட்டமிடலோடு நடக்கும் என்றும், மலேசியா அல்லது சிங்கப்பூர் ஆகிய இரு நாடுகளில் ஒரு இடத்தில் இந்த இசை வெளியீட்டு விழா நடைபெறும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

Related Posts

Leave a Comment