விஜய் டிவியில் உருவானதா புது காதல் ஜோடி..

by Editor News

விஜய் டிவியில் கடந்த மாதம் தொடங்கப்பட்ட புது சீரியல் தான் ‘வீட்டுக்கு வீடு வாசப்படி’. இந்த சீரியலில் திரவியம் ஹீரோவாக நடிக்கிறார். இவர் இதற்கு முன்னர் ஈரமான ரோஜாவே சீரியலின் இரண்டு பாகங்களிலும் நாயகனாக நடித்திருந்தார். அந்த தொடர்கள் முடிவுக்கு வந்த பின்னர் ‘வீட்டுக்கு வீடு வாசப்படி’ சீரியலில் அவர் நடித்து வருகிறார்.

இது இந்தியில் ஒளிபரப்பாகி ஹிட்டான கஹானி கர் கர் கி என்கிற தொடரின் ரீமேக் ஆகும். தமிழும் சரஸ்வதியும் சீரியல் அண்மையில் முடிவடைந்ததை அடுத்து அந்த சீரியலுக்கு பதிலாக அதே டைம் ஸ்லாட்டில் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலுக்கு படிப்படியாக நல்ல வரவேற்பும் கிடைத்து வருகிறது.

மூன்று சகோதரர்களைப் பற்றிய குடும்பத்தின் கதையாக இந்த சீரியல் உருவாகிறது. அதன்படி திரவியம் அர்ஜுன் என்கிற கதாபாத்திரத்திலும், சுகேஷ், அஜய் என்கிற கேரக்டரிலும், கண்ணன் அவினாஷாகவும் அண்ணன், தம்பிகளாக நடிக்கின்றனர். இந்த சீரியலில் அஜய்யாக நடிக்கும் சுகேஷுக்கு ஜோடியாக ஆர்த்தி சுபாஷ் நடிக்கிறார்.

இந்த நிலையில், சீரியலில் ஜோடியாக நடிக்கும் இவர்கள் இருவரும் தற்போது ஹல்தி கொண்டாட்ட புகைப்படங்களை வெளியிட்டு இருப்பதால், இவர்கள் ரியல் ஜோடிகளாக ஆகிவிட்டார்களா என்று ரசிகர்கள் ஷாக் ஆகிப்போய் உள்ளனர்.

ஆனால் உண்மையில் நடிகை ஆர்த்தி சுபாஷும், நடிகர் சுகேஷும் சீரியலில் தான் திருமணம் செய்துகொள்ள உள்ளார்கள். அவர்கள் திருமண கொண்டாட்ட ஷூட்டிங்கின் போது எடுத்த புகைப்படத்தை தான் ஆர்த்தி சுபாஷ் பதிவிட்டு இருக்கிறார்.

அண்மையில் மெளன ராகம் சீரியல் ஜோடிகளும் இதுபோல் திருமண புகைப்படங்களை வெளியிட்டு இருந்தனர். பின்னர் தான் அதுவெறும் போட்டோஷூட் என தெரியவந்தது. தற்போது அதே டிரெண்டை நடிகை ஆர்த்தி சுபாஷும் பாலோ செய்து உள்ளதால் அவர் வெளியிட்ட ஹல்தி புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன.

Related Posts

Leave a Comment