பின்புற கொழுப்பை குறைக்க 5 எளிய பயிற்சி..

by Editor News

நம்முடைய உடல் எடை மற்றும் அதிகப்படியான கொழுப்பை குறைக்க பல வழிகள் உள்ளது. பொதுவாக கொழுப்புகள் நம்முடைய அடிவயிற்றுப் பகுதியிலும், தொடைகளிலும் பின்புறத்திலும் சேகரம் ஆகின்றன. நமது உடலில் உள்ள கலோரிகளை குறைக்க மிகச்சிறந்த வழி உடற்பயிற்சி என்பது மறுக்க முடியாத உண்மை. எளிதான ஆனால் பயனுள்ள சில பயிற்சிகளை வீட்டிலேலே செய்வதன் மூலம் நம்முடைய உடல் எடையும் கொழுப்பும் குறைகிறது. அப்படியான 5 உடற்பயிற்சிகள் இதோ..

சூப்பர்மேன் உடற்பயிற்சி:

இந்த உடற்பயிற்சி உங்கள் கீழ் முதுகின் தசைகளை உறுதிப்படுத்த உதவுகிறது. தரையில் முகம் படுமாறு படுத்து, உங்கள் கைகளை முன்பக்கமாக நீட்டிக்கொள்ளுங்கள். பின்னர் ஒரே சமயத்தில் உங்கள் கை, நெஞ்சுப்பகுதி மற்றும் கால்களை மேலே தூக்குங்கள். இதே நிலையில் சில நொடிகள் நீடித்த பின்னர் உங்கள் முதுகை கீழே இறக்கவும். இந்த சூப்பர்மேன் பயிற்சி உங்கள் பின்புற தசைகளை வலுப்படுத்தி பின்புற கொழுப்பை குறைக்க உதவுகிறது.

புஷ்-அப் :

புஷ்-அப் பயிற்சி நம்முடைய முதுகு, மார்பகம், தோள்கள், கைகள் என அனைத்து பகுதிகளுக்கும் பலனளிக்கிறது. புஷ்-அப் பயிற்சிகள் நெஞ்சுப் பகுதியில் உள்ள தசைகளையே அதிகப்படுத்தும் என சொல்லப்பட்டாலும் இது கீழ் முதுகின் தசைகளையும் வலுப்படுத்தும். தொடர்ந்து புஷ்-அப் பயிற்சிகள் செய்வதால் உடலில் உள்ள கொழுப்புகள் குறையும்.

பிரிட்ஜ் பயிற்சி :

பின் தொடை மற்றும் தசைநார்களுக்கே இந்தப் பயிற்சி முக்கியமாக பயன்படும் என சொல்லப்பட்டாலும் பின்புற தசைகளையும் வலுப்படுத்த உதவும். முழங்காலை வளைத்து தரையில் பின்புறமாக படுத்து, உங்கள் இடுப்பை தரையிலிருந்து லேசாக மேலே தூக்குங்கள். இப்போது உங்கள் முழங்காலும் தோள்களும் நேர்கோடில் இருக்க வேண்டும். சில நொடிகள் இதே நிலையில் இருந்துவிட்டு உடலை கீழே இறக்குங்கள்.

கார்டியோவாஸ்குலர் உடற்பயிற்சி :

ஓட்டப்பயிற்சி, நீச்சல், சைக்கிளிங், நடைபயிற்சி போன்றவை உடலில் உள்ள ஒட்டுமொத்த கொழுப்பை குறைக்க உதவும். இந்தப் பயிற்சிகள் இதயத்துடிப்பை அதிகரித்து கலோரியை அதிகமாக எரிக்கிறது. இதன் மூலம் பின்புறம் உட்பட உடலில் உள்ள கொழுப்புகள் அனைத்தும் குறைகின்றன.

பலவிதமான ப்ளான்க் பயிற்சி:

நம்முடைய முதுகுதண்டை நிலைப்படுத்தவும், தோரணையை மேம்படுத்தவும் பின்புற தசைகளை வலுப்படுத்தவும் ப்ளான்க் பயிற்சி உதவுகிறது. சைடு ப்ளான்க், ரிவர்ஸ் ப்ளான்க், என பலவித ப்ளான்க் பயிற்சிகள் உள்ளது. இவை நம் பின்புறத்தில் உள்ள பலப் பகுதிகளை வலுப்படுத்துகிறது.

சிறந்தமுறையில் உடலில் உள்ள கொழுப்பை குறைக்க வேண்டுமென்றால் இந்தப் பயிற்சிகளோடு சேர்த்து சரிவிகித டயட்டை பின்பற்ற வேண்டும். மேலும் சீரான உடற்பயிற்சி மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை பின்பற்றுவதன் மூலம் நாம் நினைத்த இலக்கை அடையலாம்.

Related Posts

Leave a Comment