அட்சய திருதியை மறுநாளே குறைந்த தங்கம் விலை..

by Editor News

மே மாதம் முதலே தங்கம் விலை ஏற்ற இறக்கத்தை சந்தித்து வரும் நிலையில் நேற்று அட்சய திருதியை நாளில் 3 முறை தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.

அட்சய திருதியையான நேற்று நகை வாங்க மக்கள் குவிந்ததால், நகை விலை காலை மதியம் மாலை என 3 முறை உயர்ந்தது. நேற்று ஒரே நாளில் மட்டும் சவரனுக்கு ரூ.1,240 உயர்ந்த நிலையில் இன்று அதிரடியாக குறைந்துள்ளது.

அதன் படி இன்று மே 11ஆம் தேதி , 22 காரட் ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.6,750க்கும், சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.54,000க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இதே போன்று 18 காரட் தங்கம் விலை கிராமுக்கு ரூ.17 குறைந்து ஒரு கிராம் ரூ.5,529க்கும், சவரனுக்கு ரூ.136 உயர்ந்து ஒரு சவரன் ரூ.44,232க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் அதிரடியாக கிராமுக்கு 70 காசுகள் குறைந்து ஒரு கிராம் ரூ.90.50க்கும், ஒரு கிலோ ரூ,90,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Related Posts

Leave a Comment